இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியின் போது ரசிகர்கள் அனுமன் சாலிசா பாடியதாகப் பரவும் எடிட் செய்த வீடியோ

பரவிய செய்தி
இவனுங்க உலகக்கோப்பை நடத்தலை! பஜனை நடத்தி இருக்காங்க. ஆஞ்சிநேயர் பறந்து வந்த வேகத்திலே டிராவிஸ் ஹெட் க்குள்ளே லேண்ட் ஆகிட்டு இருக்கார்!
மதிப்பீடு
விளக்கம்
2023 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 240 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணியினர் 43 ஓவர்களில் அடித்து உலகக்கோப்பையை வென்றனர்.
இந்நிலையில், உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அகமதாபாத் மைதானத்தில் கூடிய ரசிகர்கள் ஆஞ்சநேயர் பஜனை(Hanuman chalisa) பாடலை பாடியதாக 20 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
வலதுசாரி இணையதளமான Opindia மற்றும் ஆர்எஸ்எஸ் பத்திரிகையான பஞ்சஜன்யா(Panchjanya) உள்ளிட்டவையில், 1.3 லட்சம் ரசிகர்கள் ஒன்றாக இணைந்து ஹனுமான் சாலிசா பாடியதாக இதே வீடியோ நேற்றுப் பதிவிட்டு இருக்கின்றனர்.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோவை கீஃப்ரேம்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், இதே வீடியோ கடந்த அக்டோபர் 27ம் தேதி யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்ததைப் பார்க்க முடிந்தது.
View this post on Instagram
மேலும், வைரல் செய்யப்படும் வீடியோவின் பின்னணியில் இணைக்கப்பட்டுள்ள அனுமன் சாலிசா பாடும் ஆடியோ கடந்த ஜூன் 3ம் தேதி jaipur.waley எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ உடன் ஒத்துப்போகிறது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது அகமதாபாத் மைதானத்தில் எடுக்கப்பட்ட வீடியோ உடன் அனுமன் பஜனை ஆடியோவை இணைத்து தவறாகப் பரப்பி உள்ளனர். அந்த வீடியோ கடந்த ஒரு மாதமாக சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. அதை மீண்டும் இறுதிப் போட்டியுடன் இணைத்து தவறாகப் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க: இன்ஸ்டாகிராமில் ஆஸ்திரேலியா வீரர் ட்ரவிஸ் குடும்பத்தினர் மீது குவியும் அருவருப்பான கமெண்ட்கள் !
மேலும் படிக்க : சாரா டெண்டுல்கர் பெயரில் இயங்கும் போலி ட்விட்டர் பக்கத்தின் பதிவை வைத்து செய்தி வெளியிட்ட தந்தி டிவி !
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர்பாக பரப்பப்பட்ட வேறு சில தவறான செய்திகள் குறித்தும் நாம் கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ரசிகர்கள் அனுமன் சாலிசா பாடியதாகப் பரப்பப்படும் வீடியோ தவறானது. அந்த வீடியோ கடந்த மாதம் முதலே பரவி வருகிறது. மேலும், அது எடிட் செய்யப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது.