ஜூன் 18-ல் இந்தியாவில் கொரோனா 97% நீங்கிவிடும் என சிங்கப்பூர் பல்கலைக்கழகம் கூறியதா ?

பரவிய செய்தி

நல்ல செய்தி: இது உண்மையாகிவிடும் என்று நம்புகிறேன். 131 நாடுகளை அடிப்படையாகக் கொண்ட சிங்கப்பூர் பல்கலைக்கழக கணக்கெடுப்பு / மறு ஆய்வுப்படி. ஜூன் 18 முதல் இந்தியா 97% கொரோனா இல்லாமல் இருக்கும். டிசம்பர் 8 முதல் உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து விடுபடும். இத்தாலி மற்றும் ஸ்பெயினைப் பற்றிய அவர்களின் கணிப்புகள் சரியாக பொருந்தியுள்ளன.

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில், ஜூன் 18-ம் தேதி உடன் இந்தியாவில் 97% கொரோனா நீங்கிவிடும், டிசம்பர் 8 முதல் கொரோனாவில் இருந்து உலகம் விடுபடும் என சிங்கப்பூரைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஆய்வில் தெரிவித்ததாக ஓர் ஃபார்வர்டு தகவல் வாட்ஸஅப், ஃபேஸ்புக் உள்ளிட்டவையில் வைரலாகி வருகிறது.

Advertisement

உண்மை என்ன ?

சிங்கப்பூர் பல்கலைக்கழகம் இந்தியாவின் கொரோனாவின் கணிப்பு குறித்து தேடுகையில், 2020 ஏப்ரல் 26ம் தேதி  சிங்கப்பூர் பல்கலைக்கழகம் கணிப்பு பற்றி இந்திய செய்திகளில் வெளியாகி இருக்கிறது. 2021-ல் அப்படி எந்த செய்திகளும் இல்லை.

2020 ஏப்ரல் மாதம் Data-Driven Innovation Lab  மற்றும் Singapore University of Technology and Design இணைந்து வெளியிட்ட தரவுகள் அடிப்படையில் வெளியிட்ட கணிப்பில், இந்தியாவில் மே 22ம் தேதி 97 சதவீதமும், ஜூலை 26ம் தேதி 100 சதவீதமும் நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 2020 டிசம்பர் 9-ம் தேதி உலகம் முழுவதும் கொரோனா நீங்கும் எனக் கூறப்பட்டு இருக்கிறது.

Advertisement

ஆனால், கணிப்புகள் போல் இந்தியாவில் பாதிப்பு குறையவோ அல்லது முழுமையாக நீங்கவோ இல்லை. தற்போது கோவிட்-19 உடைய இரண்டாம் அலை இந்தியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா பாதிப்பு குறையவில்லை என்றால், வரும் வாரங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடு தொடரும் என்ற நிலையே இருக்கிறது.

முடிவு :

நம் தேடலில், ஜூன் 18 முதல் இந்தியா 97% கொரோனா இல்லாமல் இருக்கும், டிசம்பர் 8 முதல் உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து விடுபடும் என சிங்கப்பூர் பல்கலைக்கழகம் நடத்திய கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டதாக பரப்பப்படும் ஃபார்வர்டு தகவல் வதந்தியே. கடந்த ஆண்டு வெளியிட்டதை மாற்றி தவறாக பரப்பி வருகிறார்கள்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button