இந்தியாவின் வெற்றியை கொண்டாடும் அரேபிய ஷேக்குகள் என பரப்பப்படும் போலி வீடியோ

பரவிய செய்தி

இந்தியா பாக்கிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஜெயித்தவுடன் துள்ளி குதித்து , கட்டிபிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அரேபிய ஷேக்குகள்!!

Twitter Link

மதிப்பீடு

விளக்கம்

ஆசியக் கோப்பை 2022, T20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 28-ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி துபாயில் நடைபெற்றது. விளையாட்டின் இறுதியில் ஹர்திக் பாண்டியா ஒரு பவுண்டரி அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்து இருப்பார்.

ஹர்திக் பாண்டியா பவுண்டரி அடித்ததும் அரேபிய ஷேக்குகள் உற்சாகத்தில் குதித்துக் கொண்டாடியதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன?

இந்த வீடியோ காட்சியினை ஸ்க்ரீன்சார்ட் எடுத்து கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் செய்கையில், குவைத்தில் 2020-ம் ஆண்டு கிளப்களின் அளவில் நடைபெற்ற அமீர் கோப்பைக்கான கால்பந்து போட்டியின் இறுதி நிமிடம் என்பது அறிய முடிகிறது.

2019 – 2020-ம் ஆண்டுக்கான அமீர் கால்பந்து கோப்பைக்கான இறுதிப் போட்டியானது, 2020, செப்டம்பர் 21-ம் தேதி குவைத்தில் நடைபெற்றுள்ளது. இப்போட்டியில் அரேபியக் குழு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அந்த கிளப் உடைய தலைவர் மற்றும் இயக்குநர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ அதே ஆண்டு செப்டம்பர், 22-ம் தேதி khalaf enezi என்பவர் தனது டிவிட்டரில் பகிரப்பட்டுள்ளது. மேலும், இதே தேதியில், அவ்வீடியோவினை Goalna என்ற விளையாட்டு செய்தி வலைத்தளத்தின் டிவிட்டர் பக்கத்திலும் காண முடிகிறது.

முடிவு

நம் தேடலில், இந்தியா – பாகிஸ்தான் ஆசியக் கோப்பை போட்டியில், இந்தியாவின் வெற்றியினை அரேபிய ஷேக்குகள் கொண்டாடியதாக பரப்பப்படும் வீடியோ போலியானது. 2020-ல் குவைத்தில் எடுக்கப்பட்ட விடியோவினையும், இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் வீடியோவுடன் எடிட் செய்து பரப்பப்படுகிறது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader