ஏரி தண்ணீரில் மூழ்கிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள்.. இந்தியா எனப் பரவும் சீனா வீடியோ.

பரவிய செய்தி

இந்தியாவில் மிக அழகான தண்ணீர் நெடுஞ்சாலையைக் கண்டேன்.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

நார்வே நாட்டின் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் எரிக் சோல்ஹேய்ம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” நம்பமுடியாத இந்தியா, இறுதியாக மிக அழகான தண்ணீர் நெடுஞ்சாலையை நான் கண்டேன் ” என நெடுஞ்சாலையில் கடல் போல காட்சி அளிக்கும் தண்ணீரில் வாகனங்கள் பயணிக்கும் காட்சிகள் அடங்கிய 13 நொடிகள் கொண்ட வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 

செப்டம்பர் 2ம் தேதி ஹோம் ஸ்டே & வில்லாஸ் எனும் ட்விட்டர் பக்கத்தில், ” I finally encountered the most beautiful water highway ” எனும் நிலைத்தகவல் உடன் பதிவான வீடியோவை “Incredible India” எனக் கூறி எரிக் சோல்ஹேய்ம் ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.

Twitter link 

நெடுஞ்சாலை முழுவதும்  தண்ணீரில் மூழ்கி இருக்கும் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2021 மே 24ம் தேதி கிழக்கு சீனாவின் ஜியாங்சியில் உள்ள போயாங் ஏரியின் குறுக்கே கட்டப்பட்ட போயாங்வு நெடுஞ்சாலையில் வாகனங்கள் தண்ணீரில் தெறித்து ஓடுகின்றன. அங்கு தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிவதாக ” ecns.cn எனும் இணையதளத்தில் புகைப்படங்கள் உடன் வெளியாகி செய்தி கிடைத்தது.

இதில் உள்ள படங்களில் இடம்பெற்ற இடங்களும், வைரலான வீடியோவில் உள்ள பகுதியும் ஒன்றாக இருப்பதை காண முடிந்தது.

சீனாவில் உள்ள போயாங் ஏரியில் உள்ள நெடுஞ்சாலை குறித்து தேடிய போது, ” 2021 மே மாதம் சீனாவைச் சேர்ந்த மக்கள் தினசரி செய்தி தளத்தின் முகநூல் பக்கத்தில் வெளியான வீடியோவில் காணப்படும் பகுதியும், வைரல் செய்யப்படும் வீடியோவில் இருக்கும் பகுதியும் ஒன்றாக இருப்பதைப் பார்க்கலாம்.

மேலும் படிக்க : மூலிகை தாவரம் ஊது பாவை என வைரலாகும் விசித்திரமான வீடியோ | உண்மை என்ன ?

இதற்கு முன்பாக, அடர்ந்த மழைப்பொழிவு காடுகளில் மட்டுமே வளரக்கூடிய ஊது பாவை வகையைச் சேர்ந்த மூலிகை என பரப்பப்பட்ட தவறான வீடியோவையும் எரிக் சோல்ஹேய்ம் பதிவிட்டு இருந்தார்.

முடிவு : 

நம் தேடலில், இந்தியாவில் உள்ள மிக அழகான தண்ணீர் நெடுஞ்சாலை என தண்ணீர் சூழ்ந்து இருக்கும் சாலையில் வாகனங்கள் பயணிக்கும் வீடியோ இந்தியாவைச் சேர்ந்து அல்ல, அது சீனாவில் உள்ள போயாங் ஏரியின் குறுக்கே கட்டப்பட்ட நெடுஞ்சாலை என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader