This article is from Sep 23, 2018

இந்தியாவில் வறுமை எண்ணிக்கை பாதியாக குறைந்ததா?

பரவிய செய்தி

இந்தியாவில் பல பரிமாணத்தில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து உள்ளதாக சமீபத்தில் வெளியாகிய யு.என்.டி.பி(UNDP) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

“ இந்தியாவில் 2005-06 மற்றும் 2015-16 வரையிலான காலக்கட்டத்தில் பல பரிணாமத்தில் வறுமையில் சிக்கி இருந்த 271 மில்லியன் மக்கள் வறுமையில் இருந்து மீண்டு உள்ளனர். 10 வருடத்தில் மட்டும் இந்தியாவில் வறுமையில் வாழ்பவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து உள்ளது. இந்தியா வறுமை விகிதத்தை 55% இல் இருந்து 28% சதவீதமாக குறைத்துள்ளது “ என UNDP நிர்வாகி அசிம் ஸ்டீனர் தெரிவித்துள்ளார்.

விளக்கம்

2018 செப்டம்பர் 20-ல் சர்வதேச பல பரிமாண வறுமை குறியீடு (MPI) United Nation Development Programme மற்றும் Oxford Poverty, human Development initiative ஆல் இணைந்து வெளியிடப்பட்டது.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளான 104 நாடுகளில் 662 மில்லியன் குழந்தைகள் பல பரிமாணத்தில் வறுமையில் சிக்கி உள்ளனர், 36 நாடுகளில் பாதிக்கு நிகரான குழந்தைகள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வுக் கூறுகிறது.

சர்வதேச அளவில் மொத்தம் 1.3 பில்லியன் மக்கள் பல பரிமாண வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். இது 104 நாடுகளில் உள்ள மக்கள் தொகையில் கால் பங்கு என ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது. பல பரிமாண வறுமையில் சிக்கி வாழும் மக்கள் பல வளரும் நாடுகளிலும் உள்ளனர். எனினும், குறிப்பாக துணை சஹாரா மற்றும் தெற்கு ஆசியாவில் மட்டும் 83 சதவீத மக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

2018 ஆய்வானது சுத்தமான குடிநீர், சுகாதாரம், போதிய ஊட்டச்சத்து மற்றும் தொடக்கக் கல்வி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டது.

“ இந்தியாவில் 2005-06 மற்றும் 2015-16 வரையிலான காலக்கட்டத்தில் பல பரிணாமத்தில் வறுமையில் சிக்கி இருந்த 271 மில்லியன் மக்கள் வறுமையில் இருந்து மீண்டு உள்ளனர். 10 வருடத்தில் மட்டும் இந்தியாவில் வறுமையில் வாழ்பவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து உள்ளது. இந்தியா வறுமை விகிதத்தை 55% இல் இருந்து 28% சதவீதமாக குறைத்துள்ளது “ என UNDP நிர்வாகி அசிம் ஸ்டீனர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சர்வதேச அளவில் அதிகளவில் பல பரிணாமத்தில் வறுமையில் வாழ்பவர்களை(364 மில்லியன்) அதிகமான கொண்ட நாடுகளில் இந்தியாவும் உள்ளது.

இந்தியாவில் 364 மில்லியன் மக்கள் பல பரிமாணத்தில் வறுமையில் வாழும் நிலையில், இதற்கு முன் இருந்த எண்ணிக்கையை சில மாநிலங்கள் நன்றாகவே குறைந்து உள்ளன. குறிப்பாக, கோவா, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வறுமையின் விகிதமானது நன்றாக குறைந்து உள்ளது.

“ ஆனால், வறுமையில் வாழும் மக்கள் எண்ணிக்கையில் பாதிக்கும் அதிகமானோர் வசிக்கும் மாநிலமாக ஜார்கண்ட், பீகார், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளன. இங்கு MPI ஆய்வில் குறிப்பிட்ட 364 மில்லியனில் பாதிக்கும் மேலான 196 மில்லியன் மக்கள் வறுமையில் வாழ்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்கள் “.

தெற்கு ஆசிய நாடுகளில் இந்தியாவிற்கு முன்னதாக மாலதீவுகள் (1.6%)  உள்ளன. இந்தியாவின் அண்டை நாடுகளான நேபால்(35.3%), பங்களாதேஷ் (41.1%) மற்றும் பாகிஸ்தான் (43.9%) என அதிகளவில் வறுமையில் வாடும் மக்களை கொண்டுள்ளன.

இந்தியாவில் 10 ஆண்டுகளில் வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கையில் பல மாறுதல்கள் உருவாகினாலும், அதன் வழி மாறாமல் வறுமை ஒழிய நாட்டில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். வறுமையில் வாழும் மக்களை மீட்க அரசு சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader