பாகிஸ்தான் மீது தாக்குதல் என இந்தியா வெளியிட்டது சிரியா வீடியோவா?

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

ஜம்மு காஷ்மீரின் எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்தியா தரப்பில் 4 ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவத்தின் பதுங்கு குழிகள் உள்ளிட்ட இடங்கள் மீது இந்தியா தாக்குதலை நடத்தியது. இந்தியா தாக்குதல் நடத்திய வீடியோக்கள் ராணுவ தரப்பிலும், செய்திகளில் வெளியாகின.

Advertisement

இதில், ஆங்கில செய்தி ஊடகமான என்டிடிவி, ” இந்தியா அனுப்பிய 3 ராக்கெட்களால் பாகிஸ்தான் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்ட வீடியோ ” என 5 நொடிகள் கொண்ட வீடியோவை வெளியிட்டது.

Twitter link | Archive link 

ஆனால், என்டிடிவி வெளியிட்ட தாக்குதல் வீடியோ இந்தியா பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதலின் வீடியோ அல்ல, கடந்த 2019-ம் ஆண்டு சிரியாவில் பயரங்கவாதிகள் நடத்திய தாக்குதல் வீடியோ என ஒரு ஸ்க்ரீன்ஷார்ட்டை இணைந்து என்டிடிவி போலியான வீடியோவை வெளியிடுவதாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்தியர்கள் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களும் இந்தியா போலியான வீடியோவை வெளியிட்டதாக ட்விட்டர் உள்ளிட்டவையில் அதே ஸ்க்ரீன்ஷார்டை பகிர்ந்து இருக்கிறார்கள்.

Advertisement

Twitter archive link 

உண்மை என்ன ? 

இப்படி இந்திய ராணுவம் போலியான வீடியோவை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்படும் வீடியோ போலியானது அல்ல. இந்தியா வெளியிட்டது சிரியா வீடியோ என வைரல் செய்யப்படும் ஸ்க்ரீன்ஷார்ட்டில் இருந்து ” +18 | Battles for Syria | June 9th 2019 | Jihadists attack Al Qasabiyah, South Idlib province ” எனும் தலைப்பை எடுத்து தேடுகையில், அந்த தலைப்பில் இருந்த யூடியூப் வீடியோ கிடைத்தது.

ஆனால், நமக்கு கிடைத்த வீடியோவை முழுமையாக பார்க்கையில் இந்தியா வெளியிட்ட வீடியோவின் பகுதிகள் அதில் எங்கும் இடம்பெறவில்லை. இந்தியா வெளியிட்ட வீடியோவில் இருந்து புகைப்படத்தையும், சிரியா வீடியோவில் இருக்கும் தலைப்பையும் எடுத்து ஃபோட்டோஷாப் செய்து பரப்பி இருக்கிறார்கள்.

இந்தியா தரப்பில் சிரியாவின் வீடியோ வெளியிட்டதாக பரப்பியவர்கள் ஸ்க்ரீன்ஷார்ட்டை மட்டுமே பகிர்ந்து இருக்கிறார்கள், வீடியோவை அல்ல.

Chinar corps – India army உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், என்டிடிவி வெளியிட்ட வீடியோவையே வெளியிட்டு இருக்கிறார்கள். எனினும், அதில் 25 நொடிகள் கொண்ட வீடியோ வெளியாகி இருக்கிறது. 25 நொடிகள் கொண்ட வீடியோவில் 3 ஏவுகணைகள் தாக்குவதை பார்க்க முடிகிறது.

Archive link 

இந்தியா ராணுவத்தின் தரப்பில் வெளியிடப்பட்ட வீடியோவை Invid டூல் மூலம் பயன்படுத்தி தேடிப்பார்க்கையில், இதற்கு முன்பாக வீடியோ வெளியாகியதாக தரவுகள் இல்லை. இந்தியா தரப்பில் வெளியிட்ட வீடியோ போலியானது என வதந்தியை பரப்பி இருக்கிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், பாகிஸ்தான் நாட்டின் பதுங்கு குழிகள் மீது இந்தியா நடத்திய தாக்குதலின் வீடியோ சிரியாவில் நிகழ்ந்தது என பரப்பப்படும் ஸ்க்ரீன்சோர்ட் போலியானது. இந்த வீடியோ இந்தியா ராணுவத்தின் தரப்பில் வெளியாகி இருக்கிறது. இந்தியா போலியான வீடியோவை வெளியிட்டதாக பாகிஸ்தானியர்கள் பகிர்ந்த ஸ்க்ரீன்ஷார்ட்டை இந்தியர்களும் தவறாக பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button