பதிப்பை நிறுத்திய இந்தியா டுடே அட்டைப் படத்தில் விகடன் பற்றி போலிச் செய்தி !

பரவிய செய்தி
மாதம் 50 லட்சத்துக்கு ஆனந்த விகடனை அடகு வைத்த சீனிவாசன். நிர்வாகக் குளறுபடியால் விழிபிதுங்கி நிற்கும் விகடன் குழுமம்.
மதிப்பீடு
விளக்கம்
” மாதம் 50 லட்சத்துக்கு ஆனந்த விகடனை அடகு வைத்த சீனிவாசன் ” என இந்தியா டுடே இதழில் விகடனின் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் புகைப்படத்துடன் செய்தி வெளியாகி இருப்பதாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
நெசம்மாவா.?
🤔🤔🤔 pic.twitter.com/8CsDg8WPjL— டேனியப்பா (@minimeens) March 30, 2022
உண்மை என்ன ?
2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதமே தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வந்த இந்தியா டுடே வார இதழ் வெளியீட்டை நிறுத்தி உள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
7 ஆண்டுகளுக்கு முன்பே பதிப்பை நிறுத்திய இந்தியா டுடே இதழின் அட்டைப் படத்தில் விகடன் குறித்து போலியான செய்தியை எடிட் செய்து பரப்பி வருகிறார்கள். எடிட் செய்யும் போது சமீபத்தில் வெளியான இதழ் போல் இருப்பதற்காக, தேதி மற்றும் சமீபத்திய செய்திகள் சிலவற்றையும் சேர்த்து எடிட் செய்து இருக்கிறார்கள்.
மேலும் படிக்க : இந்தியா டுடேவில் மமக தலைவர் ஜவாஹிருல்லா புகைப்படம் வெளியானதாக வதந்தி!
இதற்கு முன்பாக கூட மமக தலைவர் ஜவாஹிருல்லா பற்றி இந்தியா டுடே வெளியிட்டதாக எடிட் செய்யப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.
முடிவு :
நம் தேடலில், மாதம் 50 லட்சத்துக்கு ஆனந்த விகடனை அடகு வைத்த சீனிவாசன், நிர்வாகக் குளறுபடியால் விழிபிதுங்கி நிற்கும் விகடன் குழுமம் என இந்திய டுடே பெயரில் பரவும் அட்டைப்படம் போலியானது என அறிய முடிகிறது.