Fact Check

பனியில் பாதிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரரின் கால் ? | வைரலாகும் புகைப்படம்.

பரவிய செய்தி

பனியில் வேலைபார்த்த ஒரு இராணுவ வீரரின் கால்கள்.

மதிப்பீடு

விளக்கம்

இந்திய ராணுவ வீரர்களை பெருமைப்படுத்த சமூக வலைதளங்களில் அவர்களின் தியாகங்கள் மற்றும் பணியின் சிறப்பை பதிவிடுவது வழக்கம். அவ்வாறான கருத்துக்கள் மற்றும் புகைப்படங்கள் மூலமாக தங்களின் தேசப் பக்தியை வெளிப்படுத்தச் செய்கின்றனர்.

Advertisement

எனினும், அப்படி பதிவிடப்படும் செய்திகளுடன் இணைக்கப்பட்ட புகைப்படங்கள் உண்மையா என்பதை அறியாமல் பலரும் ராணுவ வீரர்கள் என்று ஒற்றை பெயருக்காகவே பகிர்ந்து விடுகின்றனர். அவ்வாறு பதிவிடப்படும் புகைப்படம் ஆயிரக்கணக்கில் ஷேர் செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களை அக்கிரமிக்கின்றன.

சமீபத்தில் முகநூலில் ” பனியில் வேலைபார்த்த ஒரு இராணுவ வீரரின் கால்கள் ” என்ற வாசகத்துடன் காலில் மிகவும் மோசமாக தோல் உரிந்து இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. இப்பொழுதே அந்த புகைப்படம் பல முகநூல் பக்கங்கள் மற்றும் கணக்குகளில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ?

பனிப் பகுதியில் ராணுவத்தில் பணியாற்றிய வீரரின் கால் என வைரலாகும் புகைப்படத்தின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள ஆராய்ந்து பார்த்தோம். புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் செய்து தேடுகையில் ஓர் முகநூல் பதிவை கண்டறிந்தோம்.

2018-ம் ஆண்டு மே 14-ம் தேதி சிங்கப்பூரைச் சேர்ந்த ” Tiger Fluids ” என்ற நிறுவனத்தின் முகநூல் பக்கத்தில் ” காலில் மோசமாக தோல் உரிந்து இருக்கும் ” புகைப்படத்தை பகிர்ந்து உள்ளனர். அந்த பக்கத்தில் ட்ரில்லிங் தொடர்பான புகைப்படங்கள் இருப்பதை காண முடிந்தது. அந்த காலின் புகைப்படம் அங்கு வேலை பார்க்கும் ஒருவர் உடையதாக கூட இருந்து இருக்கலாம்.

முடிவு :

நம்முடைய தேடலில் இருந்து, வைரலாகும் காலின் புகைப்படம் இந்திய ராணுவ வீரர் உடைய கால்கள் இல்லை என தெரிந்து கொள்ள முடிந்தது. இப்புகைப்படம் ஓராண்டிற்கு முன்பாக முகநூலில் சிங்கப்பூர் பக்கத்தில் பதிவாகி இருக்கிறது. மேலும், ராணுவ வீரரின் கால் எனக் கூறுவதற்கு ஆதாரங்கள் இல்லை.

இந்திய ராணுவ வீரர்கள் கடுமையான சூழலில் நாட்டிற்கு பாதுகாப்பை அளிக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், போலியான புகைப்படங்கள் மூலம் ராணுவ வீரர்களை அவமதிக்காதீர்கள்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button