பனியில் உறைந்த மனிதர் | இந்திய ராணுவ வீரரா ?

பரவிய செய்தி
நாட்டுக்காக போராடும் இந்திய ராணுவ வீரர்கள்.
மதிப்பீடு
சுருக்கம்
படத்தில் இருப்பது அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு காணொளியில் வருவது. இந்திய இராணுவ வீரர் அல்ல.
விளக்கம்
நீண்ட காலமாக இந்திய ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தையும், அவர்கள் பணியின் போது சந்திக்கும் துயரங்களையும் முகநூல் தளத்தில் அதிகம் கண்டு வருகிறோம்.
ராணுவ வீரர்கள் என பதிவிட்டாலே அப்பதிவுக்கு லைக், ஷேர் ஆயிரக்கணக்கைத் தாண்டும். அவ்வாறு ஷேர் செய்யப்படும் பதிவுகள் வைரல் ஆகிக் கொண்டே இருக்கும். அத்தகைய வைரல் பதிவுகளில் பல உண்மையானவையாக இருந்தாலும், சில தவறான பதிவுகளும் இடம்பெறுகிறது.
போட்டோஷாப் செய்த படங்கள், பிற நாட்டு ராணுவ வீரர்களின் படங்கள், ஏதோ சில படங்களை இணைத்து இந்திய ராணுவ வீரர்களின் தியாகம் என பதிவிட்டு விடுகின்றனர்.
அதை போன்றே சமீபத்தில் உடலில் பனிக் கட்டிகள் மறைத்த இராணுவ வீரர் என இப்படமும் வைரலாகியது. வைரலாகிய புகைப்படத்தில் இருப்பவர் பற்றி தேடுகையில் அப்படத்தில் இருப்பவர் பற்றிய வீடியோ ஒன்று கிடைத்தது.
உண்மையான படம் :
2017-ல் டிசம்பர் 25-ல் jerry mills என்ற Youtube சேனலில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் இருந்து இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. வடக்கு அமெரிக்காவில் கனடாவின் எல்லையில் அருகே உள்ள Marquette-ல் Presque isle park-ல் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
அங்கு பூஜ்ஜிய வெப்பநிலையில் பனிக்கட்டிகள் படிந்து இருப்பது வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. பிரத்யேகமாக உடை அணிந்து அங்கு உள்ள நீரில் இருக்கும் பொழுது அவர் பனிக்கட்டியில் உறைந்து இருப்பது காண்பிக்கப்படும்.
ஆக, அமெரிக்கப் பகுதியில் எடுக்கப்பட்ட படங்களை இந்திய ராணுவ வீரர் என தவறாக பரப்பியுள்ளனர். இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு பரவிய செய்திகள் பற்றியும் கீழே உள்ள லிங்கில் படிக்கவும்.
இந்திய ராணுவ வீரர்களை பெருமைப்படுத்த பரவும் தவறான படங்கள்..!
உயிரை பணயம் வைத்து நாட்டை காக்கும் வீரர்களின் படங்களா?
இந்திய இராணுவ வீரர்களுக்கு உண்மையாகவே பெருமைகள் ஏராளம் இருக்க இம்மாதிரியான போலியான புகழ் தேவையற்றதே !
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.