டேவிட் வார்னரை பார்த்து ரசிகர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்டதாகப் பரவும் எடிட் செய்த வீடியோ !

பரவிய செய்தி
404 error. ராமர் பருப்பு எல்லாம் இந்தியாக்குள்ள Minorities ah மிரட்ட மட்டும் தான் use ஆகும்.
மதிப்பீடு
விளக்கம்
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. அப்போட்டியின் போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரிடம் இந்திய ரசிகர்கள் சிலர் ஜெய் ஸ்ரீராம் என முழக்கம் எழுப்பியதாக வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.
இந்த வாய் மயிருக்கு மட்டும் குறைச்சல் இருக்காதுடா சங்கி.. pic.twitter.com/wLsiDffrJi
— Kovai Harish (@KovaiHarish) November 21, 2023
உண்மை என்ன ?
பரவக் கூடிய வீடியோவின் கீப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில் அந்த வீடியோவின் பின்னணியில் ஜெய் ஸ்ரீராம் முழக்கம் இருப்பது போல் எடிட் செய்யப்பட்டுள்ளதை அறிய முடிந்தது.
டேவிட் வார்னரிடம் ஜெய் ஸ்ரீராம் என இந்திய ரசிகர்கள் முழக்கம் எழுப்பியதாகக் கூறப்படும் நேரத்தில் வேறொரு கோணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ கடந்த (2023) அக்டோபர் 28ம் தேதி ஒரு யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இரண்டு வீடியோக்களிலும் வார்னர் செய்யக்கூடிய சைகை மற்றும் விளம்பர திரை ஆகியவை ஒரே மாதிரி இருப்பதைக் காண முடிகிறது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி கடந்த (நவம்பர்) 19ம் தேதி நடைபெற்றது. ஆனால், அதற்கு முன்னரே இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் உள்ளது.
அக்டோபர் மாதம் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் இந்திய ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என முழக்கம் எழுப்பவில்லை. புஷ்பா படத்தில் வருவது போல செய்யச் சொல்லித்தான் கூறுகின்றனர். தெலுங்கு படம் புஷ்பாவில் அல்லு அர்ஜுன் செய்வது போல் வார்னர் பலமுறை செய்துள்ளார். அப்படிச் செய்யச் சொல்லித்தான் ரசிகர்கள் கேட்டுள்ளனர். அந்த வீடியோவில் ஜெய் ஸ்ரீராம் முழக்கம் இருப்பது போல் எடிட் செய்து தவறாக சமூக ஊடகங்களில் பரப்புகின்றனர்.
View this post on Instagram
ஆனால், கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் போட்டி நடைபெற்றது. அதில் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் ஆட்டமிழந்து மைதானத்திலிருந்து பெவிலியனுக்கு நடந்து செல்லும்போது இந்திய ரசிகர்கள் சிலர் அவருக்கு எதிராக ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியின் போது ரசிகர்கள் அனுமன் சாலிசா பாடியதாகப் பரவும் எடிட் செய்த வீடியோ
மேலும் படிக்க : ‘இது கிரிக்கெட் மாஃபியாவான பிசிசிஐ-க்கு எதிரான வெற்றி’ என ரிக்கி பாண்டிங் கூறியதாகப் பரவும் வதந்தி!
முடிவு :
நம் தேடலில், இந்தியா ஆஸ்திரேலியா இடையில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய ரசிகர்கள் சிலர் டேவிட் வார்னரை பார்த்து ஜெய் ஸ்ரீராம் என முழக்கம் எழுப்பியதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல.
அந்த வீடியோ அக்டோபர் மாதம் முதலே சமூக வலைத்தளங்களில் பரவி உள்ளது. அந்த தேதியில் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறவில்லை. மேலும் அதில் புஷ்பா படத்தில் வருவதை போல்தான் செய்யச் சொல்லி ரசிகர்கள் கேட்டுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.