இந்திய தீவு ஒன்றிற்கு கலாம் ஐயாவின் பெயர் சூட்டியுள்ளனரா?

பரவிய செய்தி

ஒடிசாவில் அமைந்துள்ள இந்தியாவின் மிகவும் மேம்பட்ட ஏவுகணை சோதனை தளமான வீலர் தீவிற்கு அப்துல் கலாம் அவர்களின் பெயரை சூட்டியுள்ளனர் .

மதிப்பீடு

சுருக்கம்

ஒடிசாவில் உள்ள வீலர் தீவு இனி கலாம் தீவு என்று அழைக்கப்படும் ..

விளக்கம்

இந்தியாவின் ஏவுகணை சோதனை தளமான வீலர் தீவு வங்காள விரிகுடாவின் ஒடிசா கடற்க்கரையில் இருந்து 1௦ கி.மீ தொலைவில் அமைந்துள்ளது . சுமார் 2 கி.மீ நீளம் கொண்ட இந்த தீவின் நிலபரப்பு 390  ஏக்கர் ஆகும் . இந்த தீவில் ஆகாஷ் , அக்னி , அஸ்ட்ரா , பிரம்மோஸ் , நிர்ர்பாய் ,பிரஹார் , பிரித்வி , ஷாரியா , மேம்பட்ட விமான பாதுகாப்பு மற்றும் பிரித்வி ஏர் பாதுகாப்பு போன்ற சோதனைகள் நடந்துள்ளன . இந்தியாவின் மிகவும் மேம்பட்ட ஏவுகணை சோதனை தளமாக வீலர் தீவு அமைந்து வந்தது .

27 ஜூலை 2௦17 அன்று ஒடிசாவில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியில் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினார் . அதன்பின் வீலர் தீவிற்கு அப்துல் கலாம் அவர்களின் பெயரை சூட்டுவது தொடர்பான அரசாணையின் நகலை முதல்வர் பட்நாயக்கிடம் வழங்கப்பட்டது .

மேலும் நினைவஞ்சலியில் பேசிய முதல்வர் பட்நாயக் , அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவில் அனைவாராலும் நேசிக்கப்பட்டவர் . அவர் விஞ்ஞானியாக பணியாற்றிய போது சாந்திப்பூர் மற்றும் வீலர் தீவில் தான் அதிகம் தங்கி பணியாற்றி வந்தார் . இந்திய ஏவுகனை தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணியில் அயராது உழைத்தவர் . மேலும் 1993 ஆம் ஆண்டு அப்துல் கலாம் அவர்களின் கோரிக்கையை ஏற்று வரலாற்று சிறப்புமிக்க வீலர் தீவை பாதுகாப்பு அமைச்சகத்திற்கு வழங்கினார் பிஜூ பட்நாயக் என்று கூறினார் .

அப்துல் கலாம் அவர்கள் ஏவுகணை சோதனைகளில் பணியாற்றினாலும் , அவர் அனுபவித்த இயற்கையான கடல் சார்ந்த சூழல்களால் பல கவிதைகளை அவரின் மை ஜர்னி என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார் .

இறந்தும் மக்கள் மனதில் வாழும் ஒப்பற்ற மனிதர் அப்துல் கலாம் ஐயா அவர்களின் நினைவகம் இராமேஸ்வரத்தின் பேய்க்கரும்புஎன்ற இடத்தில்  அமைக்கப்பட்டுள்ளது .

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button