இந்திய கடற்படை தினத்திற்கு அமெரிக்க கப்பல் படத்தை பயன்படுத்திய தமிழக பாஜக!

பரவிய செய்தி

04 டிசம்பர் இந்திய கடற்படை தினம் – பாஜக தமிழ்நாடு

Twitter archive link 

மதிப்பீடு

விளக்கம்

டிசம்பர் 4-ம் தேதி இந்திய தேசிய கடற்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2020 டிசம்பர் 4-ம் தேதி தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கடற்படை தினத்திற்கு வாழ்த்துக் கூறி பகிரப்பட்ட புகைப்படம் இந்திய கடற்படைக்கு சொந்தமாக கப்பலின் புகைப்படம் அல்ல.

Advertisement

கடந்த 2015-ம் ஆண்டில் இருந்தே இப்போர் கப்பலின் புகைப்படம் இந்திய கடற்படை தினத்தின் போது பகிரப்பட்டு வருகிறது. இக்கப்பலின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2009-ம் ஆண்டு மே 7-ம் தேதி www.stripes.com இணையதளத்தில் ” Navy taking steps to move toward irregular warfare ” எனும் தலைப்பில் வெளியாகி இருக்கிறது. இது அமெரிக்க கடற்படையின் போர் கப்பலாகும்.

மேலும், wallpapercave.com எனும் இணையதளத்தில் வெளியான அமெரிக்க கடற்படை புகைப்படங்களின் தொகுப்பிலும் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது. பாதுகாப்பு குறித்த செய்திகளை வெளியிடும் Livefist எனும் இணையதளம் 2019-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கம் இதே புகைப்படத்தை பகிர்ந்த போது, இது அமெரிக்காவின் ஃப்ரீடம் க்ளாஸ் லிட்டோரல் காம்பாட் ஷிப் என ட்வீட் செய்து இருந்தது.

Archive link

Advertisement

2017-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தலைமை ட்விட்டர் பக்கத்திலும், 2019-ம் ஆண்டு தூர்தர்சன் செய்தியின் ட்விட்டர் பக்கத்திலும் இதே புகைப்படத்தை பயன்படுத்தி வாழ்த்துக் கூறி ட்வீட் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், பல அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக வலைதளவாசிகளும் அமெரிக்க கப்பலின் புகைப்படத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

Archive link 

Archive link 

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button