நீங்கள் சல்யூட் செய்வது இந்திய ராணுவ வீரருக்கா ?| உண்மையை அறிக.

பரவிய செய்தி
நம் உயிர் காக்க தன் உயிரை பணயம் வைக்கும் இவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் .
மதிப்பீடு
விளக்கம்
காலணியில் இருந்து எடுக்கப்பட்ட ராணுவ வீரர் ஒருவரின் பாதம் நீரில் ஊறி சுருக்கங்கள் நிறைந்ததுடன் காட்சி அளிப்பதாக இருக்கும் மேற்காணும் புகைப்படம் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைரலாகி வருகிறது. நம் நாட்டைக் காக்க பாடுபடும் ராணுவ வீரர்களுக்கு சல்யூட் செய்வதாக மக்கள் பலரும் கமெண்ட் செய்து வருகினறனர்.
நவம்பர் 29-ம் தேதி keerthana என்ற முகநூல் பக்கத்தில், ” நம் உயிர் காக்க தன் உயிரை பணயம் வைக்கும் இவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் ” என்ற வாசகத்துடன் வெளியான ஒரு ராணுவ வீரர் பாதத்தின் புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கான லைக்குகள், ஷேர்கள், நூற்றுக்கணக்கான சல்யூட் கமெண்ட்கள் பதிவிடப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
இந்திய அளவில் வைரலாகும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து ஆராய தீர்மானித்தோம். அதில், ” புகைப்படத்தில் இருக்கும் ராணுவ வீரரின் சீருடையின் இடதுபக்க பாக்கெட்டின் மேலே ” US Marine ” என்ற வார்த்தைகள் இடம்பெற்று இருக்கிறது “.
இதையடுத்து, அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ கடற்படையின் இணையதளத்தை ஆராய்ந்த பொழுது வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவரின் சீருடையும், அமெரிக்க கடற்படை வீரர்களின் சீருடையும் ஒன்றாக இருப்பதை அறிய முடிந்தது.
இந்தியாவில் வைரலாகிக் கொண்டிருக்கும் வீரர் அணிந்து இருக்கும் ராணுவ சீருடை இந்திய ராணுவத்துடையது அல்ல, அமெரிக்க கடற்படை உடையது. ஆனால், தவறாக இந்திய ராணுவ வீரர் என இந்திய அளவில் வைரலாகி உள்ளது.
மேலும் படிக்க : பனியில் பாதிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரரின் கால் ? | வைரலாகும் புகைப்படம்
இந்திய ராணுவ வீரர்களின் பணியை போன்றும் வகையில் தவறான புகைப்படங்கள் பரவுவது முதல் முறை அல்ல. ராணுவ வீரர்களை பெருமைப்படுத்துவதாகக் கூறி தவறான புகைப்படங்கள், தவறான செய்திகள், பிற நாட்டு ராணுவ வீரர்களின் புகைப்படங்களை பதிவிடுகின்றனர்.
மேலும் படிக்கச் : இந்திய ராணுவ வீரர்களை பெருமைப்படுத்த பரவும் தவறான படங்கள்..!
உண்மை என்ன என்பதை அறியாமல் மக்களும் தவறான புகைப்படங்களை பகிர்கின்றனர். இந்திய ராணுவ வீரர்கள் தங்களின் பணியின் போது எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சில சமயங்களில் வீடியோக்கள் எடுத்து பதிவிடுகின்றனர். ஆனால், போலியான புகைப்படங்களே அதிக அளவில் வைரலாக்கப்படுகிறது.