சவூதியில் மதம் சார்ந்த தவறான பதிவால் கைதான இந்தியர்| வைரலாகும் புகைப்படங்கள் !

பரவிய செய்தி
காபாவை இடித்து விட்டு ராமர் கோவில் மக்காவில் கட்டுவோம், மோடி எங்களுடன் இருக்கிறார் என முகநூலில் பதிவிட்ட இந்தியர் சவூதியில் கைது.
மதிப்பீடு
விளக்கம்
சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இந்தியர் ஹரிஷ் பங்கேரா தன்னுடைய முகநூல் பக்கத்தில் மதம் சார்ந்த தவறான பதிவுகளையும், சவூதியின் இளவரசர் சல்மானை திட்டிய பதிவின் காரணத்திற்காக சவூதி போலீசால் கைது செய்யப்பட்டதாக புகைப்படங்கள், முகநூல் பதிவுகளின் ஸ்க்ரீன்ஷார்ட்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

#Kundapur #Karnataka #ArrestInSaudi
Wife of Harish Bangera, a resident of Kundapur who was arrested in Saudi Arabia for his hate post, has requested the local police to deactive her husband’s social media account @prakash_TNIE @vinndz_TNIE @XpressBengaluru @santwana99— Amit Upadhye (@Amitsen_TNIE) December 23, 2019
சவூதி அரேபியாவில் தவறான கருத்தை பதிவிட்டு கைது செய்யப்பட்டுள்ள குந்தாப்பூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் பங்கேரா உடைய மனைவி, தன் கணவருடைய சமூக வலைதள கணக்கை முடக்குமாறு உள்ளூர் காவல்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளதாக பதிவிட்டு உள்ளார்.

இதற்கு முன்பாக 2016-ல் சவூதியில், இஸ்லாமிய புனித தலத்தை தவறாக சித்தரித்து பதிவிட்ட காரணத்தினால் கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. காபாவில் புத்தரின் புகைப்படத்தை வைத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த புகைப்படத்தால் இந்தியர் கைது செய்யப்பட்டதாக அல்அரேபியா செய்தி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
2016 டிசம்பரில் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில், ” சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த சங்கர் பூன்னம் என்பவர் காபா மீது இந்து கடவுளான சிவன் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டதால் கைது செய்யப்பட்டதாக ” வெளியாகி இருக்கிறது.