இந்தியாவில் முதன் முதலில் இளைஞர் அணியை அமைத்தது திமுக கட்சியா ?

பரவிய செய்தி

இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு அரசியல் கட்சி இளைஞர் அணியை அமைத்தது திமுக தான்! 1980 ஜூலை 20 திமுக_இளைஞர்_அணி உருவாக்கப்பட்ட நாள் இன்று.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

ஜூலை 20-ம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி அமைக்கப்பட்ட நாள் அன்று திமுக ஆதரவாளர்கள் பலரும் பதிவிட்ட பதிவுகளில், இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு அரசியல் கட்சி இளைஞர் அணியை அமைத்தது திமுக தான். 1980 ஜூலை 20 திமுக இளைஞர் அணி 1உருவாக்கப்பட்ட நாள் என பதிவிட்டு இருக்கிறார்கள்.

Advertisement

கடந்த சில ஆண்டுகளாவே, திமுக இளைஞர் அணி உருவாக்கப்பட்ட நாள் தொடர்பான பதிவுகளில் இதே தகவலை பகிர்ந்து வந்து உள்ளனர். ஆகையால், இதுகுறித்து ஆராய்ந்து பார்க்கத் தீர்மனித்தோம்.

உண்மை என்ன ?

அரசியல் கட்சிகள் தங்களுக்கென இளைஞர் அணி உள்ளிட்ட பல அணிகளை உருவாக்கி கொள்வது வழக்கம். ஆனால், இந்தியாவில் முதன் முதலில் இளைஞர் அணியை அமைத்த அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல. திமுகவிற்கு முன்பாகவே இந்திய தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகளில் இளைஞர் அணி உருவாகி உள்ளது.

” இளைஞர் காங்கிரஸின் கொடி, லோகோ போன்றவற்றின் அடிப்படையில் இளைஞர் காங்கிரசின் உண்மையான வடிவம் 1950-க்கு பிறகு நடந்துள்ளது. 1965-ம் ஆண்டில் இருந்தே இளைஞர் காங்கிரஸ் நேரடியாக வலதுசாரி பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக நேரடி அரசியல் பாத்திரத்தை வகித்தது ” என இந்திய இளைஞர் காங்கிரஸ் உடைய இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

1978-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி வெளியான இந்தியா டுடே செய்தியில், ” ஜனதா எம்.பி சுப்ரமணியன் சுவாமி ஆளும் கட்சியின் இளைஞர் பிரிவு என்று கூறி ஆர்.எஸ்.எஸ் நடத்தும் அமைப்பான ஜனதா யுவ மோர்ச்சாவை விட்டு விலக முடிவு செய்ததாக நம்பப்படுகிறது ” என வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்கமுதன்முதலில் சுற்றுச்சூழல் அணியை உருவாக்கியது திமுகவா, நாம் தமிழர் கட்சியா ?

இதற்கு முன்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்தில் சுற்றுசூழல் அணி தொடங்கப்பட்ட போதும் முதல் முறையாக சுற்றுச்சூழல் அணி தொடங்கப்பட்டதாக தவறான தகவலை பகிர்ந்தனர் என கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

முடிவு :

நம் தேடலில், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முன்பாக தேசிய அளவிலான அரசியல் கட்சிகளில் இளைஞர் அணி பிரிவு இருந்து இருக்கிறது. ஆகையால், இந்தியாவிலேயே முதன் முதலில் அரசியல் கட்சியில் இளைஞர் அணியை தொடங்கியது திமுக எனக் கூறுவது தவறான தகவல் என அறிய முடிகிறது.

கூடுதல் தகவல் :

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அளவிலான இளைஞர் அமைப்பான அனைத்து இந்திய இளைஞர் கூட்டமைப்பு(AIYF) 1959-ம் ஆண்டு மே 3-ம் தேதி தொடங்கப்பட்டு இருக்கிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.




ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button