This article is from Jan 19, 2020

இந்திரா காந்தியுடன் இருப்பது அவர் கணவரின் தந்தை யூனிஸ் கானா ?

பரவிய செய்தி

இதுதான் யூனிஸ்கான் மகன் பெரோஸ்கான். அதாவது நேருவின் மகளாகிய இந்திராவின் கணவன்.. இதில் புரியாத புதிர் என்ன என்றால் நேருவின் மகளும் பெரோஸ்கானின் மனைவியுமாகிய இந்திராக்கான் எப்படி இந்திராகாந்தி ஆனதுதான்.

மதிப்பீடு

விளக்கம்

ஜவஹர்லால் நேருவின் மகள் இந்திரா காந்தியின் இளமைகால புகைப்படத்தில் அவரின் அருகே இருப்பது அவருடைய கணவரின் தந்தையான யூனிஸ்கான் எனக் கூறி மேற்காணும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திரா காந்தியின் கணவர் முஸ்லீம் என்ற கருத்து மீண்டும் மீண்டும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் கருத்தே. உண்மையில், இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்தி முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர் அல்ல. அவர் பார்சி இனத்தைச் சேர்ந்தவர். இந்தியாவில் புலம்பெயர்ந்த பார்சி இனத்தைச் சேர்ந்த பெரோஸ் காந்தியின் தந்தை ஜகாங்கீர் ஃபாரீதூன் காந்தி ஆவார்.  யூனிஸ்கான் அல்ல.

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து தேடுகையில், புகைப்படங்களின் விற்பனை தளமான Alamy எனும் தளத்தில் நேரு மற்றும் இந்திராவின் படங்கள் இடம்பெற்று உள்ளன.

அதில், வயதான தோற்றத்தில் தாடியுடன் இருப்பவரை நிக்கோலஸ் ரோரிச் எனக் குறிப்பிட்டு உள்ளார். அவர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஓவியர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவர் அருகில் இருப்பவர் இந்திய தூதர் முகமத் யூனஸ் கான்.

Alamy மற்றும் wikimedia commons என்ற இரு தளத்திலும் நேரு, இந்திரா காந்தி, நிக்கோலஸ் சந்தித்துக் கொண்ட பொழுது எடுக்கப்பட்ட மற்றொரு புகைப்படமும் வெளியாகி இருக்கிறது.  இந்தியாவின் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குல்லு பகுதியில் நேரு, இந்திரா காந்தி, நிக்கோலஸ் ரோரிச் மற்றும் யூனஸ் கான் ஆகியோரின் சந்திப்பு நிகழ்ந்து உள்ளது.

மேலும் படிக்க : தன் கணவர் முஸ்லீம் என்பதால் இந்திரா காந்தி மதம் மாறினாரா ?

இந்திரா காந்தியின் கணவரை முஸ்லீம் மதத்தவர் என்றும், இந்திரா காந்தி முஸ்லீம் மதத்திற்கு மாறியதாக முன்பே தவறான தகவல்கள் வைரல் செய்யப்பட்டன. அது குறித்தும் நாம் விரிவாக கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

நம்முடைய தேடலில் இருந்து, நேரு மற்றும் இந்திராவின் இளமைகால புகைப்படத்தில் அவர்களுடன் இருப்பது அவர் கணவரின் தந்தை அல்ல. அவ்விருவரும் ரஷ்ய நாட்டின் ஓவியர் மற்றும் இந்திய வெளியுறத்துறையில் பணியாற்றிய யூனஸ் கான் ஆவர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader