இந்தோனேசியாவில் 2 மணி நேரத்தில் கொரோனாவை குணப்படுத்தும் இளநீர் மருந்தா ?

பரவிய செய்தி

இந்தோனேசியா நாட்டில் இப்போது கொரோனாவை 2 மணி நேரத்தில் குணப்படுத்தும் மருத்துவத்தை கண்டுபிடுத்துள்ளனர். ஒரு இளநீரில் ஒரு டீ ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் தேன் மற்றும் பாதி எலுமிச்சை பழச்சாறு சேர்த்து குடிக்கின்றனர். குடித்த 2 மணி நேரத்திற்கு பிறகு கொரோனாவிலிருந்து குணமடைகிறார்கள். இதை ஒரு முறை மட்டுமே குடித்து விட்டு 3 நாட்களுக்கு பிறகு கோவிட் சோதனைக்குச் சென்றால் அவர்களுக்கு முடிவுகள் நெகட்டிவ்வாக இருக்கின்றன. இதை அனைவரும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை முயற்சி செய்கிறார்கள். இந்தோனேசியாவில் இப்போது மிகவும் பிரபலமாக உள்ள இந்த மருத்துவம் மலேசியா வரை பரவியுள்ளது.

மதிப்பீடு

விளக்கம்

கோவிட்19 நோய்தொற்றில் இன்றளவும் உலகம் சிக்குண்டு பாதிப்புகளை சந்தித்து வரும் நேரத்தில் கொரோனாவை 2 மணி நேரத்தில் குணப்படுத்தும் மருந்தை இந்தோனேசியாவில் கண்டுபிடித்து உள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

Advertisement

உண்மை என்ன ? 

இந்தோனேசியாவில் இளநீரில் உப்பு, தேன் மற்றும் எலுமிச்சை பழச்சாறு கலந்து குடிப்பதன் மூலம் கொரோனாவை குணப்படுத்தியதா எனத் தேடுகையில், இந்த தகவல் இந்தோனேசியா மொழியில் தொடங்கி பல மொழிகளில் பரவி இருக்கிறது.

இது குறித்து மருத்துவ பேராசிரியரும், இந்தோனேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தின் டீன் ஆகிய ஆரி ஃபஹ்ரியல் சியாமின், ” இவ்வாறு கூறப்படும் மருந்து கோவிட்-19ன் உடைய மருந்தாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இது ஒரு தவறான செய்தி. இப்போதைக்கு கோவிட்-19ஐ திறம்பட கொல்லக்கூடிய நவீன அல்லது மூலிகை மருந்து எதும்  இல்லை ” என AFP இணையதளத்திற்கு பதில் அளித்து இருக்கிறார்.

இதேபோல், இந்தோனேசிய நகரமான யோகியாகர்தாவில் உள்ள கட்ஜ மாடா பல்கலைக்கழகத்தின் மருந்தியல் பேராசிரியர் ஜூலிஸ் இகவாதி , ” பதிவுகளில் உள்ள தகவல் ஆதாரமற்றது ” எனக் கூறியதாக ஜூன் 22-ம் தேதி AFP இணையதளம் வெளியிட்டு இருக்கிறது.

இளநீரில் உப்பு, தேன், எலுமிச்சைச்சாறு கலந்து குடிப்பதால் கொரோனா 2 மணி நேரத்தில் குணமாகிறது என இந்தோனேசிய அரசாங்கமோ, மருத்துவர்களோ கூறவில்லை. அந்நாட்டைச் சேர்ந்த மருத்துவர்களே அதை மறுத்து இருக்கிறார்கள்.

மேலும் படிக்க : பாண்டிச்சேரி மாணவர் கோவிட்-19க்கு மருந்து கண்டுபிடித்ததாக வாட்ஸ்அப் வதந்தி !

Advertisement

கொரோனா வைரஸை பாதிப்பை குணப்படுத்தும் மருந்துகள் என எண்ணற்ற தவறான தகவல்களும், வதந்திகளும் சமூக வலைதளங்களில் பரவியது குறித்து நாம் பதிவிட்டு இருக்கிறோம்.

மேலும் படிக்க : ஆவி பிடித்தல், கிராம்பை வாயில் வைத்திருத்தல் கொரோனாவை அழிக்குமா ?

முடிவு : 

நம் தேடலில், இந்தோனேசியாவில் இளநீரில் உப்பு, தேன், எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் 2 மணி நேரத்தில் கொரோனாவை குணப்படுத்துவதாக பரவும் தகவல் தவறானது என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button