இந்தோனேசியா விமான விபத்தில் குழந்தை மீட்கப்பட்டதா ?

பரவிய செய்தி

இறைவனின் நாட்டம் இல்லாமல் எதுவும் நடக்காது. நேற்று விபத்துக்குள்ளான விமானம் விழுந்த கடற்பகுதியில் இருந்து ஒரு குழந்தை பெற்றோர்கள் இல்லாமல் கடலில் மிதந்த போது படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளது. ஒரு இரவு முழுவதும் கடலில் மிதந்தும் குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை – குவைத் தமிழ் நெட்வொர்க்.

மதிப்பீடு

சுருக்கம்

இந்தோனேசியாவில் நிகழ்ந்த விமான விபத்தில் இருந்து தப்பித்த குழந்தையை மீட்பு படையினர் காப்பாற்றியதாக வைரலாகும் படங்கள் ஜூலை மாதம் நிகழ்ந்த கப்பல் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை என்பதே உண்மை. வதந்திகளை நம்ப வேண்டாம், பகிர வேண்டாம்.

விளக்கம்

இந்தோனேசியாவின் ஜகர்தாவில் இருந்து புறப்பட்ட 189 பயணிகளைக் கொண்ட Lion Air Flight JT 610 நடுவானில் மாயமானது. சிறிது நேரத்திற்கு பிறகு மாயமான விமானம் நடுக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியதாக தகவல் வெளியாகியது. விபத்துக்குள்ளாகிய விமானத்தில் இருந்து பச்சிளம் குழந்தை கடலில் மிதந்து வந்ததைக் கண்டு மீட்புப் படையினர் காப்பாற்றியதாக் இணையத்தில் செய்திகள் வைரலாகி வருகிறது.

Advertisement

குழந்தையின் புகைப்படங்கள் கொண்ட பதிவுகள் இந்தோனேசியா மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வைரலாகி வருகிறது. ஆயிரக்கணக்கான ஷேர். லைக், கமெண்ட்களை குழந்தையின் புகைப்படம் பெற்றுள்ளது.

இந்தோனேசியா குழந்தை மீட்பு :

பல நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் பற்றி சரியான தகவலை அளித்துள்ளார் அந்நாட்டின் பேரிடர் மீட்பு ஏஜென்சி செய்தித்தொடர்பாளர் Sutopo Purwo Nugroho .

“ சமூக வலைத்தளங்களின் பல பதிவுகளில் JT610 விமானத்தில் சென்ற குழந்தை என புகைப்படங்கள் பகிரப்படுகிறது. இந்த குழந்தை ஜூன் 3, 2018 selayar தீவு பகுதியில் நிகழ்ந்த கப்பல் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை. ஆகையால், இது வதந்தி. வதந்திகளைப் பரப்ப வேண்டாம் “ என Sutopo Purwo Nugroho தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

Advertisement

பிற வதந்திகள் :

இந்தோனேசியாவில் இன்டர்நெட் பயனாளர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் அதிகளவில் வதந்திகள் பரவுகிறது. இந்தோனேசியாவில் பேரிடர் நேரங்களில் வதந்திகள் அளவில்லாமல் செல்கின்றது. குழந்தை புகைப்படத்தை பதிவிட்டு வதந்தி பரப்பியது போன்று விபத்துக்குள்ளாகிய விமானம் மற்றும் விமானத்தில் இருந்து பலரும் மீட்கப்பட்டனர் என பல வதந்திகளை பரப்பியுள்ளனர்.

“ விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு கடைசி நிமிடத்தில் எடுக்கப்பட்டவை என பரவும் youtube வீடியோக்கள் 1996-ல் எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் கடத்தப்பட்ட போது விபத்தாகி இந்தியப் பெருங்கடல் பகுதியில் தரையிறங்கிய போது எடுக்கப்பட்டவை “

“ விபத்தாகியா விமானம் கண்டுபிடிக்கப்பட்டு மீட்பு படையினர் இருப்பது போன்று வைரலாகும் புகைப்படமானது 2013-ல் பாலி விமான நிலைய ஓடுதளத்தில் Lion Air விமானத்தில் விபத்து நேர்ந்த போது எடுக்கப்பட்டவை “ என்றும் Sutopo Purwo Nugroho கூறியுள்ளார்.

இந்தோனேசியா விமான விபத்து தொடர்பாக வதந்திகள் பரவுவது தொடர்பாக அந்நாடு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button