இந்தோனேசியாவில் 7000 ஆண்டுகள் பழமையான சிவாலயம் கண்டுபிடிப்பா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி

இஸ்லாமியப் பெருமக்கள் அதிகமாக வாழ்கின்ற இந்தோனேசியா நாட்டில் பூமிக்கடியில் 7500 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவியருளிய சிவாலயம் கண்டுபிடிப்பு ! சைவ சமயத்தின், தமிழ்ச் சமுதாயத்தின் தனிப் பெருந்தலைவர், நால்வர் பெருமக்களுள் முதல்வர், மதுரை ஆதீனத்தை 2500 ஆண்டுகளுக்கு முன்பே நிறுவியருளிய சீர்காழித் திருஞானசம்பந்தப் பெருமான் தோன்றுவதற்கு முன்பே 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நிலையில். இந்தோனேசியாவில் இச்சிவாலயம் நிர்மாணிக்கப் பெற்றிருக்கிறது என்றால் “சைவ சமயம்” “இந்து சமயம்” என்பது எவ்வளவு மிகப் பெரிய தொன்மை வாய்ந்தது என்பதை நன்கு உணரலாம்!

மதிப்பீடு

விளக்கம்

இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இந்தோனேசியா நாட்டில் 7000 ஆண்டுகள் பழமையான சிவாலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக sreepriya iyer என்ற முகநூல் கணக்கில் வீடியோவுடன் பதிவிட்டு உள்ளனர். அந்த பதிவு 2.5 ஆயிரம் லைக்குகள், 7 ஆயிரம் ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்த்தோம்.

Advertisement

Facebook post archived link  

7000 ஆண்டுகள் பழமையானதா ? 

” Hindu past ” என்ற தலைப்பில் வெளியான தொலைக்காட்சி வீடியோ குறித்து தேடிய பொழுது ” Hoparound India ” என்ற யூட்யூப் சேனலில் 2013-ம் ஆண்டு ” 1000 years old hindu temple has been founded in Indonesia ” என்ற தலைப்பில் இதே வீடியோ வெளியாகி இருக்கிறது.

Video Archived link  

Advertisement

அந்த வீடியோவின் தொடக்கத்திலேயே செய்தி வசிப்பவர் 1000 ஆண்டுகள் பழமையான கோவில் என்றே குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான இந்து கோவில் என குறிப்பிடும் குரல் பதிவையும் கேட்கலாம்.

2012-ல் Know Hinduism என்ற யூட்யூப் சேனலில் ” Ancient Hindu Temple Uncovered 1000 years old ” என்ற தலைப்பில் இதே வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்தோனேசியாவில் 1000 முதல் 1100 ஆண்டுகள் பழமையான சிவன், விநாயர் சிலைகள் கிடைத்த கோவிலை 7,000 ஆண்டுகள் பழமையானது எனத் திரித்து தவறாக பரப்பியுள்ளனர்.

கோவில் பற்றிய விவரம் :

2009-ம் ஆண்டில் இந்தோனேசியா நாட்டின் யோக்யகர்டா பிராந்தியத்தில் அமைந்துள்ள இஸ்லாமிக் பல்கலைக்கழகத்தின் நூலகப் பகுதி அருகே பழமையான ஹிந்து ஆலயமானது இந்தோனேசியாவின் Archaeological heritage preservation hall Yogyakarta-வின் அகழ்வாராய்ச்சி குழுவால் தோண்டும் காட்சிகளே வீடியோவில் இடம்பெற்று இருக்கிறது.

2010 பிப்ரவரி மாதம் 17-ம் தேதி பிரபல ஆங்கில நாளிதழான நியூயார்க் டைம்ஸ் இணையதளத்தில் ” Under Indonesia’s Surface, an Intricate Quilt of Faiths ” என்ற தலைப்பில் இது குறித்த கட்டுரை வெளியிட்டு இருந்தனர்.

கிம்புலன் கோவில் என அழைக்கப்படும் இக்கோவிலில் நந்தி மற்றும் விநாயகர் சிலைகள் காணப்பட்டன. இஸ்லாமிக் பல்கலைக்கழகத்தின் பகுதியில் தோண்டி எடுக்கப்பட்ட இரு கோவில்களிலும் மேற்கூரைகள் இல்லை. அவற்றில் ஒன்று முக்கிய கோவில், மற்றொன்று perwara கோவில் ஆகும். முக்கியக் கோவிலில் சிவபெருமானின் லிங்க உருவம் கிடைத்துள்ளது.

மேலும் படிக்க : சவூதியில் 3000 ஆண்டுகள் பழமையான ஹிந்துக் கோவிலா ?

இந்த பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து ” சவூதி அரேபியாவில் கண்டெடுக்கப்பட்ட 3000 ஆண்டுகள் பழமையானக் கோவில் என வதந்தியை பரப்பி இருந்தனர். அதை முன்பே ஆதாரத்துடன் யூடர்ன் வெளியிட்டு இருக்கிறது. அதையும் படிக்க.

இந்தோனேசியாவில் பழமையான சிவன், விநாயகர் ஆலயங்கள் தொல்லியல் ஆய்வாளர்களால் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளன. பண்டைய தமிழக நிலப்பரப்பில் ஆட்சி செய்து கொண்ட மன்னர்களும் கடல் கடந்து இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை கைப்பற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : கீழடி ஆராய்ச்சியில் சிவலிங்க சிலை கிடைத்துள்ளதா ?

இந்தோனேசியாவின் யோக்யகர்டா பகுதியில் கிடைத்த சிவலிங்கத்தை கீழடியில் கிடைத்ததாக வதந்தியை பரப்பி இருந்தனர். அந்த வதந்தியையும் நாம் முறியடித்து இருந்தோம்.

இந்தோனேசியாவின் இஸ்லாமிக் பல்கலைக்கழகம் அருகே கண்டெடுக்கப்பட்ட ஹிந்துக் கோவில் மட்டுமின்றி Sambisari (1996), gebang (1937), Brong, 9 நூற்றாண்டைச் சேர்ந்த parambanan உள்ளிட்ட பல ஹிந்துக் கோவில்கள் இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டன.

முடிவு : 

நமக்கு கிடைத்த தகவலில், இந்தோனேசியாவில் 2009-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட 1000 ஆண்டுகள் பழமையான இந்து ஆலயத்தை 7000 ஆண்டுகள் பழமையானது என தவறான செய்தியை பகிர்ந்து முகநூலில் வைரலாக்கி வருகின்றனர் என்பதை நிரூபிக்க முடிந்தது.

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Subscribe with

Ask YouTurn

Please complete the required fields.




ஆதாரம்

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close