இந்தோனேசியாவின் ரூபாய் நோட்டில் விநாயகர் உருவம்.

பரவிய செய்தி

இந்தோனேசியா நாட்டின் ரூபாய் நோட்டுகளில் விநாயகர் கடவுளின் திருஉருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

இந்தோனேசியாவில் உள்ள 20,000 ரூபாய் நோட்டுகளில் இந்து மத கடவுளான விநாயகரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இல்லை.

விளக்கம்

இந்து மத கடவுளான விநாயகரின் உருவம் இந்தோனேசியா நாட்டின் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றிருப்பது ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் தருகிறது.

Advertisement

 சுமார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளால் ஆனது தான் இந்தோனேசியா என்ற நாடு. இந்தோனேசியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடாகும். அங்கு 87% க்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்வதாக கூறுகிறார்கள்.

அந்நாட்டில் இரண்டு சதவிகிதத்திற்கும் குறைவான மக்களே இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள். எனினும், அந்நாட்டில் உள்ள பாலி தீவில் இந்து மக்கள் அதிகம் வாழ்கின்றனர். அவர்கள் செல்வத்தின் அதிபதியாக விநாயகர் கடவுளை கருதுகிறார்கள்.

 முழு முதற்க்கடவுளான விநாயகருக்கு இந்தியாவில் மட்டுமின்றி இந்தோனேசியாவிலும் மதிப்பு அளிக்கப்படுகிறது. எனவே அந்நாட்டின் 20,000 ரூபாய் நோட்டுகளில் விநாயகரின் திருஉருவம் பொறிக்கப்பட்டுள்ளது. விநாயகர் இடம்பெற்ற 20 ஆயிரம் ரூபாய் நோட்டில், அந்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர் மற்றும் கல்விக்கு வித்திட்ட தியாக செம்மல் கிஹாஜர் தேவாந்தரானியின் உருவமும் பொறிக்கப்பட்டிற்கும். மேலும் நோட்டின் பின்புறத்தில் கல்வி நிறுவனத்தின் படமும் இடம்பெற்றிருக்கும்.

விநாயகர் இடம்பெற்ற 20,000 ரூபாய் நோட்டுகள் பற்றிய முழுவிவரம் அறிய Youturn சார்பில் பேங்க் இந்தோனேசியாவிற்கு மெயில் அனுப்பப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த பதிலில், விநாயகர் உருவம் பொறித்த நோட்டுகள் இந்தோனேசியாவில் அரிதாகக் காணப்படும் நோட்டுகள் என்றும், தற்போது மக்களின் பணப் புழக்கத்தில் இந்த நோட்டுகள் இல்லையென்றும் கூறியுள்ளார்கள்.

ஆனால், இந்தியாவின் ஆந்திரா மாநிலம் அமலாபுரம் பகுதியை சேர்ந்த எஸ்.பி.ஐ அதிகாரி ரவி சுப்பிரமணியம் என்பவர் இந்த நோட்டை சேகரித்து வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button