அரிசி தரும் ATM.!

பரவிய செய்தி
இந்தோனேசியாவில் ஏழை எளிய மக்களுக்கு ஏடிஎம் மூலம் அரிசி வழங்கும் திட்டம். வறுமையால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மக்களுக்கு இலவசமாக அரிசியை ஏடிஎம் மூலமாக வழங்கி வருகின்றனர்.
மதிப்பீடு
விளக்கம்
ஏடிஎம் மூலம் பணம் பெறுவதை கேட்டு இருப்போம், ஆனால் அரிசி வழங்குவதை பற்றி யாரும் அறிந்து இருக்க மாட்டோம். அப்படிப்பட்ட திட்டம் இந்தோனேசியா நாட்டில் செயல்பாட்டில் உள்ளது என்றால் ஆச்சரியமே..!
The National Board of Zakat( Baznas) என்ற அமைப்பு மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை உயர்த்த புதிய கண்டுபிடிப்புகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. அதில், அரிசி வழங்கும் ஏடிஎம் மிஷின் ஒன்று. இந்த ஏடிஎம் சேவையின் மூலம் அந்நாட்டு மக்களின் அடிப்படை உணவுக்கான அரிசி தேவையைப் பூர்த்தி செய்கிறது.
ஜனவரி 2017-ல் Baznas அமைப்பின் மூலம் ஏழை எளிய மக்கள் உள்ள பகுதியில், பேரிடர்கள் நடைபெற்ற பகுதிகளில் இலவச அரிசி வழங்கும் ஏடிஎம் வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. ஏடிஎம் membership கார்டு மூலம் பணம் எடுப்பது போன்று அரிசியைப் பெற்றுக் கொள்ளும் விதத்தில் உள்ளது.
இந்தோனேசிய ஏழை மக்களுக்காக பல சேவைகளை வழங்கி வரும் இந்த அமைப்பு அவர்களின் யோசனைகளையும் ஏற்றுக் கொண்டு மக்களின் தேவையை புரிந்துக் கொள்கிறது. Baznas அமைப்பின் 16-வது ஆண்டின் நினைவாக ஜகர்தாவில் உள்ள அர்தலோகா கட்டிடத்தில் ஏடிஎம் திட்டம் தொடங்கப்பட்டது. இதை மாதிரி வடிவமாகவே தொடங்கினர்.
ஒவ்வொரு எடிஎம்-யில் 230 லிட்டர் அரிசியை சேகரித்து வைக்க இயலும். இவை 120 குடும்பங்களுக்கு போதுமானதாக இருக்கும் என்றும், மாதத்திற்கு 8 முறை இந்த ஏடிஎம்-யில் அரிசி நிரப்பப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. ஜகர்தாவை தொடர்ந்து இந்தோனேசியாவின் பல இடங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டது. மார்ச் 2016 புள்ளி விவரத்தின்படி இந்தோனேசியா நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களின் எண்ணிக்கை 28.1 மில்லியன்.
International food policy research institute -இன்global hunger index-ல் இந்தோனேசியா 72வது இடத்தில் பின்தங்கி இருந்தது. இந்தியா அதை விட பின்தங்கி 100-வது இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. நாட்டில் மக்களுக்கு அடிப்படை தேவையான அரிசியை ஏடிஎம் வாயிலாக வழங்குவதன் மூலம் நாட்டில் ஏழை மக்களுக்கு ஏற்படும் அரிசி தட்டுப்பாடு குறையும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தோனேசியாவில் உள்ள bandung-ஐ சுற்றியுள்ள 151 தொலைத்தூர கிராமங்களில் இலவச ஏடிஎம் அரிசி வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது. மேலும், வறுமை பாதித்த மற்றப் பகுதிகளில் பல ஏடிஎம்களை நிறுவ உள்ளதாக bandung மேயர் ரிட்வான் கமில் குறிப்பிட்டுள்ளார்.
பரிந்துரை
பட்டினியால் மக்கள் வாடும் நாடுகளில் இந்தியா 100-வது இடம்.