சிந்து சமவெளியில் பேசப்பட்டது தமிழ் மொழி தான்! ஆராய்ச்சியாளர்கள் கூறுவதென்ன ?

பரவிய செய்தி

சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழி தான் என்பதற்கான ஆதாரங்கள் கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் தெரியவந்துள்ளது.

சுருக்கம்

குறியீட்டு ஆராய்ச்சியாளரான சுபாஷ் சந்திர போஸ், சங்க கால தமிழ் குறியீடுகளே சிந்து சமவெளி நாகரிகத்தில் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

விளக்கம்

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் அகழாய்வை தொடர்ந்து நடைபெற்ற கீழடி அகழாய்வு தான் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகறியச் செய்தது. எனினும், கீழடியில் முழுமையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழி தான் என்பதற்கான ஆதாரங்கள் கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் தெரியவந்துள்ளது என்று செய்திகள் வெளியாகி வருகிறது.

ஜல்லிக்கட்டு தமிழர் பாரம்பரியம், வீரம் மட்டுமல்ல, அவை பண்டைய கலாச்சாரம் மற்றும் மொழியை நிலைநாட்டும் திறவுகோல். துள்ளிகுதித்து ஓடும் காளைகள் பற்றி சங்க இலக்கியங்களில் கூறியுள்ளனர்.

Advertisement

திருச்சியைச் சேர்ந்த பிரபல குறியீட்டு ஆராய்ச்சியாளரான சுபாஷ் சந்திர போஸ், சங்க கால தமிழ் குறியீடுகளே சிந்து சமவெளி நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்ட “ Ancient Tamizh- The Faculty of Harappan Symbols and Scripts “ என்ற புத்தகத்தில் சேலம் அகழாய்வு அருங்காட்சியத்தில் உள்ள 6 அடி உயர கல்வெட்டில் இருந்த, ஜல்லிகட்டை குறிக்கும் “ எருது விளையாடி பட்டன் ” என்ற வார்த்தையை “ bull attaining death during a heroic adventure “ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்ற குறிப்பு ஒன்று பன்னாவளி 335 சிந்து சமவெளி முத்திரையில் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். அதில் இரு எழுத்தில் ” வடு ” என்று உள்ளது. இது தமிழர்களின் தொன்மையான நூலான தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரம் இயல் 45-ல், அச்சொல்லின் விரிவாக்கம் வடுகொள்தல் அல்லது தழும்புபடுதல் என்பதை குறிக்கிறது என்றுள்ளார்.

வீரம் சார்ந்த குறியீடுகள் மட்டுமின்றி பல்வேறு அகழ்வாராய்ச்சி குறியீடுகள், கல்வெட்டுகள், பாறை ஓவியங்கள் ஆகியவற்றை ஒப்பிடுகையில் ஹரப்பா மற்றும் தமிழ் எழுத்துகளுக்கு அசைக்கமுடியாத ஒற்றுமை இருப்பதை தெளிவுபடுத்துகிறது. இந்த புத்தகம் மொழி பற்றி விளங்கிக் கொள்ள முடியாத பண்டைய சிந்துசமவெளி நாகரிகத்தின் மொழி தமிழ் தான் என்று வாதாடுகிறது.

1920 ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட 3300-1300 கி.மு இடைப்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்தின் மொழி பற்றிய விளக்கம் இன்று வரை அறிந்து கொள்ள முடியாமல் உள்ளது.

Advertisement

தமிழ்நாடு அகழ்வாராய்ச்சி துறையின் முன்னாள் துணை இயக்குனர் பூங்குன்றன் இப்புத்தக வெளியீட்டு விழாவில் பேசுகையில், “ ஹரப்பா நாகரிகம் மற்றும் தமிழக கோயில்களில் உள்ள ஒற்றுமைகளை விளக்குகிறது. இந்த புத்தகம் ஒரு மைல்கல் ஆகும். இதன் மூலம் சிந்து சமவெளியில் தமிழ் மொழி பயன்படுத்தப்பட்டது என்பதை நிரூபிக்க இயலும் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் பாறை ஓவியங்கள், குறியீடுகள், எழுத்துக்கள் குறித்து ஆய்வுகள் மேற்கோள்ளும் ஆராய்ச்சியாளர்களை கொண்டு குழு அமைத்து கீழடி உள்ளிட்ட பகுதியில் கிடைத்த பொருட்களை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று போஸ் வலியுறுத்தியுள்ளார்.

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம்.
எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Subscribe with

Please complete the required fields.
ஆதாரம்

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close