This article is from May 25, 2019

கல்வி நிறுவனங்களில் கூடுதல் கட்டணம் வாங்கினால் புகார் தெரிவிக்க எண்கள் !

பரவிய செய்தி

அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்தை விட கூடுதல் கட்டணத்தை வசூல் செய்தால் மற்றும் வாங்கும் பணத்திற்கு முறையான பில் கொடுக்காத நிறுவனங்கள் மீது புகார் தெரிவிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு! ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் அரசு என்ன கட்டணம் நிர்ணயம் செய்ததை அரசு சார்பில் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும்.

மதிப்பீடு

சுருக்கம்

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணங்கள் வாங்கினால் அது குறித்து புகார்கள் அளிக்க புதிய குழு ஒன்று அமைத்து உள்ளது.

விளக்கம்

கல்வி நிறுவனங்களில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் நிறுவனங்கள் மீது புகார் தெரிவிக்கலாம் என்றும், அதற்கான புகார் எண்களை தமிழக அரசு அறிவித்து உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது.

சில பொறியியல் கல்லூரிகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார்களை தெரிவித்து இருந்தனர். இதனை ஆய்வு செய்வதற்கு தொழில்நுட்ப கல்வி கூடுதல் இயக்குனர் அருளரசு தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணங்களை கல்வி நிறுவனங்கள் வசூலித்தால் புகார்கள் தெரிவிக்கப்பதற்கு புகார் எண்களை வெளியிட்டு உள்ளனர். மாணவர்கள், பெற்றோர்கள் புகார் தெரிவிக்க 044- 22351018 , 22352299, செல்போன் எண் 7598728698 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.

புகார் தொடர்பான உரிய ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என குழுவின் தலைவர் தெரிவித்து இருக்கிறார்.

பள்ளிகள் :

கல்லூரிகளை காட்டிலும் தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது எல்லையில்லாமல் போய்விடுகிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகளில் அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை அறிந்து இருப்போம்.

பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பெற்றோர்கள் புகார்கள் தெரிவித்தாலும், பல பள்ளிகளில் நடக்கும் கட்டண கொள்ளை குறித்து புகார் அளிக்க பலரும் முன் வருவதில்லை. தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் உடனடியாக பள்ளிக்கல்வித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader