This article is from Sep 30, 2018

தொழில் முதலீடுகளுக்கு சாத்தியமான மாநிலங்களில் தமிழகம் 2-ம் இடம்..!

பரவிய செய்தி

2018-ல் தொழில் முதலீடுகளுக்கு சாத்தியமான சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 2-வது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் டெல்லி விளங்குகிறது. தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளுக்கு சாதகம் இல்லை, தொழில் நிறுவனங்கள் இங்கிருந்து செல்கிறார்கள் என்று பொய்யுரைத்தவர்கள் பார்க்கும் வரை பகிரவும்.

மதிப்பீடு

சுருக்கம்

National council of applied economic research ( 2018) வெளியிட்ட தொழில் முதலீடுகளுக்கு சாத்தியமான மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் சென்ற ஆண்டை விட 4 இடங்கள் ஏற்றம் கண்டு 2-ம் இடத்தில் உள்ளது.

விளக்கம்

இந்திய மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் தொழில் முதலீடு செய்ய சூழ்நிலைகள், அரசாங்க உதவி, அரசியல் போன்றவை மிக முக்கியமானவை. முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தேவையான வசதிகளை ஏற்படுத்தி தந்தால் மட்டுமே தொழில் முதலீடுகளை ஈர்க்க முடியும். இந்நிலையில், முதலீடுகளுக்கு சாத்தியமான மாநிலங்களில் தமிழகம் முன்னோக்கி சென்றுள்ளதாக பொருளாதார ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

பொருளாதார சிந்தனை கொண்ட National council of applied economic research(NCAER)  2018 ஆம் ஆண்டிற்கான தொழில் முதலீடுகளுக்கு சாத்தியமான சிறந்த மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில், இந்தியாவின் தலைநகர் டெல்லி முதலிடத்தை பிடித்துள்ளது. டெல்லிக்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

” மாநிலங்களுக்கு இடையே நிலவும் போட்டித்தன்மையான நிலம், தொழிலாளர்கள், உள்கட்டமைப்பு, பொருளாதார காலநிலை, அரசியல் நிலைத்தன்மை மற்றும் அரசாங்கம், தொழில் கருத்து உள்ளிட்ட ஆறு தூண்களை மையமாகக் கொண்டு இப்பட்டியல் இடங்கள் உருவாக்கப்பட்டது. NCAER ஆய்வாளர்கள் 21 மாநிலங்களில் தயாரிப்பு மற்றும் சேவை துறையில் உள்ள பல்வேறு நிலைகளில் உள்ள 1,049 தொழில் நிறுவனங்களிடம் ஆய்வை மேற்கொண்டுள்ளனர் “.

2017-ம் ஆண்டு ஆய்வில் பதில் அளித்தவர்களில் 55% பேர் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை மிகப்பெரிய தடையாக இருப்பதாகவும், 57% பேர் ஊழல் மிகப்பெரிய தடையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த ஆண்டு ஆய்வில் 46% பேர் மட்டுமே ஊழல் மிகப்பெரிய தடையாக உள்ளதாக கூறியுள்ளனர்.

” 2018-ம் ஆண்டு NCAER பட்டியலில், அதிகபட்சமாக மேற்கு வங்கம் சென்ற ஆண்டை விட 11 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தில் உள்ளது. குஜராத், ஹரியானா, மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா, தெலுங்கான, கர்நாடகா மாநிலங்கள் தமிழகத்தை தொடர்ந்து உள்ளன “.

சென்ற ஆண்டு முதலிடத்தில் இருந்த குஜராத் இந்த ஆண்டு மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. ஓடிஸா, உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம், ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்கள் பட்டியலில் இறுதி இடங்களில் உள்ளன.

தொழிலாளர்கள் தூணில் தமிழகம் முதலிலும், ஆந்திரா இரண்டாம் இடத்திலும் உள்ளன. அரசாங்கம் மற்றும் அரசியல் நிலைத்தன்மையில் தமிழகம் நான்கு இடங்கள் முன்னேறி முதலிடத்தில் உள்ளது.

தமிழகம் தொழில் முனைவோர்களின் முதலீடுகளுக்கு சாத்தியமான மாநிலமாக சென்ற ஆண்டை விட முன்னேற்றம் கண்டதாக NCAER ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader