ஐபிஎல் போட்டியில் ‘2 Years of Worst திராவிட மாடல்’ என்ற பதாகையை காண்பித்ததாகப் பரவும் எடிட் செய்த படம் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிவடைந்ததை முன்னிட்டு, கடந்த 2 ஆண்டுகள் சாதனை தொடர்பான கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் மே 6ம் தேதி தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும், திமுகவின் 2 ஆண்டுகள் ஆட்சிக்கு ஆதரவான மற்றும் எதிரானப் பதிவுகளும் சமூக வலைதளங்களில் வெளியாகின.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு மத்தியில் ரசிகர் ஒருவர் ” 2 Years of Worst திராவிட மாடல் ” என எழுதப்பட்ட பதாகையை ஏந்தி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிமுகவினரால் பரப்பப்பட்டு வருகிறது.
தரமான சம்பவம் 💥💥 pic.twitter.com/OxmsLxIyCj
— மாறன் பாண்டியன் (@maaran_pandi) May 7, 2023
சின்னவர் இடத்துக்கே போய் சம்பவம் செஞ்சுட்டான்.🔥🔥🔥 pic.twitter.com/utWUlpcaay
— பால முருகன் (@Bala_3191) May 7, 2023
உண்மை என்ன ?
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2023 மே 7ம் தேதி PandianAdv.தமிழ்நாடு எனும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட இதே புகைப்படத்தில் உள்ள பதாகையில் “2 Years of திராவிட மாடல் “ என்றே உள்ளது.
#2YrsOfDravidianModel pic.twitter.com/TPCG39Umxv
— Pandian🇮🇳Adv.தமிழ்நாடு (@dapandian1232) May 7, 2023
மே 6ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிஎஸ்கே-மும்பை அணிகள் இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர் ஒருவர் “2 Years of திராவிட மாடல் ” என பதாகை ஏந்தி இருக்கும் புகைப்படத்தை திமுகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதாக ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
ஐபிஎல் போட்டியின் போது ரசிகர்களுக்கு மத்தியில் காண்பிக்கப்பட்ட பதாகையில் Worst என எடிட் செய்து இருப்பதைத் தெளிவாக காண முடிந்தது.
மேலும் படிக்க : தி கேரளா ஸ்டோரி : முதல்வர் ஸ்டாலினை பிரதமர் மோடி பாராட்டியதாகப் பரவும் போலிச் செய்தி !
மேலும் படிக்க : மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவான போராட்டத்திற்காக முஸ்லீம்கள் சீக்கியர் வேடம் அணிவதாகப் பரப்பப்படும் தவறான வீடியோ !
முடிவு :
நம் தேடலில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரசிகர் ஒருவர் ஏந்திய பதாகையில் 2 Years of Worst திராவிட மாடல் என இடம்பெற்றதாகப் பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.