This article is from Mar 28, 2019

ஐ.பி.எல் போட்டியில் ” Chowkidar Chor Hai ” முழக்கம், படம் உண்மையா ?

பரவிய செய்தி

ஜெய்பூர் ஐ.பி.எல் போட்டியில் ” காவலாளியே திருடன் ” என மோடிக்கு எதிரான முழங்கிய ரசிகர்கள்.  உடலில் ” chowkidar chor hai ” என எழுதி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

மதிப்பீடு

சுருக்கம்

எது உண்மை : ஐ.பி.எல் போட்டியில் ” chowkidar chor ” என்ற முழக்கம் எழுந்தது உண்மையே.

எது பொய் : செய்தி சேனல்களில், இணைய செய்திகளில் பதிவிட்டு இருக்கும் உடலில் ” chowkidar chor ” என எழுதி இருக்கும் படங்கள் ஐ.பி.எல் போட்டியில் எடுக்கப்பட்டவை அல்ல.

விளக்கம்

2019 ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் பிரதமர் மோடிக்கு எதிரான முழக்கம் எழுந்தது இந்திய அளவில் ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பேசும் பொருளானது.

மைதானத்தில் ரசிகர்கள் ” chowkidar chor hai ” , அதவாது ” காவலாளியே திருடன் ” என மோடிக்கு எதிராக முழங்கினர். இது பாஜக கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. செய்திகளும், சமூக வலைதளங்களிலும் ” chowkidar chor hai ” முழக்கம் பற்றி வெளியாகும் செய்தியுடன் உடலில் ” chowkidar chor hai ” என எழுதி வரிசையாக இருப்பவர்களின் படங்கள் பகிரப்படுகிறது.

” chowkidar chor  ” முழக்கம் : 

ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணி போட்டியில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்யும் பொழுது 18-வது ஓவரில் மைதானத்தில் இருந்தவர்கள் ” chowkidar chor hai ” என முழக்கமிட்டுள்ளனர்.

Hot star தளத்தில் உள்ள போட்டியின் முழு வீடியோவில் 2.30.32 நேரத்தில் ” chowkidar chor hai ” என முழக்கம் இடம்பெற்று இருப்பதை கேட்கலாம்.

வீடியோ : https://www.hotstar.com/sports/cricket/vivo-ipl-2019/rajasthan-royals-vs-kings-xi-punjab-m189955/match-clips/match-4-rr-vs-kxip/2001755406

chowkidar chor படங்கள் : 

ஐ.பி.எல் மைதானத்தில் ” chowkidar chor hai ” முழக்கம் எழுந்தது உண்மை என்றாலும், அதனுடன் பகிரப்பட்ட படங்கள் ஐ.பி.எல் மைதானத்தில் எடுக்கப்பட்டவை அல்ல என கண்டறிய முடிந்தது.

உடலில் ” chowkidar chor hai ” என எழுதி இருப்பவர்களின் புகைப்படங்களின் உண்மை செய்தியை அறிய இணையத்தில் தேடுகையில் ஒரு மாதத்திற்கு முன்பு  பதிவாகி இருப்பதைக் காண முடிந்தது.

மேலும், இப்படத்தினைப் பற்றி தேடுகையில், உடலில் மோடிக்கு எதிரான முழக்கத்தை எழுதி இருப்பவர்கள் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னெடுக்கப்பட்ட  ” Yuva karanti yatra ” 2018 டிசம்பர் 16-ல் தொடங்கி ஜனவரி 30, 2019-ல் முடிவடைந்தது. இதன் முடிவில் தலைநகர் டெல்லியில் உள்ள Talkatora மைதானத்தில் “இன்குலாப் ” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு வந்த  காங்கிரஸ் ஆதரவாளர்கள் மோடிக்கு எதிராக ” chowkidar chor hai  ” என தங்களின் உடலில் எழுதியுள்ளனர். இந்தியா டுடேவில் வெளியான செய்தியிலும் அவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஐ.பி.எல் போட்டியில் மோடிக்கு எதிரான ” chowkidar chor hai  ” முழக்கம் எழுந்து இருந்தாலும், உடலில் ” chowkidar chor  hai ” எழுதி இருப்பவர்கள் ஐ.பி.எல் போட்டி மைதானத்தில் இருந்தவர்கள் எனக் கூறுவது முற்றிலும் தவறான செய்தியாகும். இந்திய ஊடகங்களே இதனை தவறாக காண்பித்து வருகின்றனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader