ஈரானில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்லும் வீடியோவா ?

பரவிய செய்தி

ஈரானின் இன்றைய நிலமையை பாருங்கள். இதை பார்த்தாவது வீட்டில் அடங்கி இருங்கள்!.

மதிப்பீடு

விளக்கம்

ஈரான் நாட்டில் கோவிட்-19 தொற்றால் இறந்த மக்களின் உடல்களை வாகனத்தில் கொண்டு செல்லும் காட்சி என ஓர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. யூடர்ன் ஃபாலோயர் தரப்பில் வீடியோவின் உண்மைத்தன்மையை கூறுமாறு கேட்கப்பட்டும் வருகிறது.

கொரோனா வைரசால் இறந்தவர்களின் உடல்கள் என பல தவறான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன என பல கட்டுரைகள் மூலம் தெரிவித்து வருகிறோம். அதைத் தொடர்ந்து தற்போது வைரலாகும் இந்த வீடியோ குறித்தும் ஆராய்ந்து பார்த்தோம்.

Advertisement

உண்மை என்ன ?

வைரலாகும் வீடியோவின் ஸ்க்ரீன்ஷார்டை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், பிப்ரவரி 28-ம் தேதி அரபு மொழியில் முகநூலில் பதிவாகிய வீடியோ கிடைத்தது. மேற்கொண்டு தேடுகையில், 2019 ஆகஸ்ட் மாதம் MakkaHHajj எனும் யூடியூப் சேனலில் “ Hajj 2019 (1440) Makkah Live 58 death in during hajj saudi arabia ” என்ற தலைப்பில் இதே வீடியோ வெளியாகி இருக்கிறது.

2019-ல் சவூதி அரேபியாவின் ஹஜ் யாத்திரையின் போது இறந்த 58 பேரின் உடல்கள் எடுத்து செல்லும் காட்சி என வெளியாகி இருக்கிறது. மெக்காவிற்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பொழுது அங்கு கூடும் மக்கள் கூட்டத்தில் சிக்கியும், வெளியிலின் தாக்கத்தாலும் உயிரிழப்புகள் ஏற்படுவதுண்டு.

Advertisement

சவூதி அரேபியாவில் மெக்காவில் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லும் வீடியோ என 2019 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகி இருக்கிறது. எனினும், இந்த குறித்த விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே இந்த வீடியோ பதிவாகி இருக்கிறது என்பதன் அடிப்படையில் ஈரானில் வைரசால் இறந்தவர்கள் என வைரலாகும் வீடியோ தவறான செய்தி என உறுதிப்படுத்த முடிந்தது.

இதுவரை ஈரானில் கொரோனா வைரசால் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர், 2,517 பேர் இறந்த உள்ளனர், வைரஸ் பாதிப்பில் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீண்டு உள்ளார்கள். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவும் தருணத்தில் மக்களை விதிமுறை கடைபிடிக்க வைக்க கூட தவறான வீடியோக்கள் பரப்பப்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
PHP Code Snippets Powered By : XYZScripts.com
Close
Close