கச்சத்தீவு மீட்புக்குழுவின் தலைவராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டதாக பரவும் பொய் செய்தி!

பரவிய செய்தி

அடுத்த தமிழக முதல்வர் தயாராகிறார்…

அண்ணாமலை.ஜி விரைவில் தமிழக முதல்வர்…

எல்லா புகழும் தேசியத்துக்கே…

X Link

மதிப்பீடு

விளக்கம்

கச்சத்தீவை மீட்க முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை. ஆலோசனைக் குழுவின் தலைவராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமனம் எனக் குறிப்பிட்டு தந்தி டிவி  செய்தி அட்டை ஒன்றை சமூக ஊடகங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

உண்மை என்ன ?

பரவக்கூடிய தந்தி டிவி நியூஸ் கார்ட் குறித்து  அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் தேடினோம்.  அப்படி எந்தவொரு செய்தி அட்டையையும் அவர்கள் சமீபத்தில் பதிவிடவில்லை என்பதை அறியமுடிந்தது. 

இதனைத்தொடர்ந்து, பாஜகவின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் தேடினோம். அதிலும், இம்மாதிரியான செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை எனத் தெரியவந்தது.

மேலும், வைரலாகக் கூடிய நியூஸ் கார்டில் குறிப்பிட்டுள்ள  ஜூன் 11, 2024 அன்று தந்தி தொலைக்காட்சியும் இவ்வாறான செய்தியை பதிவிடவில்லை என அறியமுடிந்தது.

 

மேற்கொண்டு தேடியதில், கச்சத்தீவு – புதிய தரவுகள் திமுகவின் இரட்டை நிலைப்பாடு என்ற முகத்திரையை கிழித்துள்ளது கச்சத்தீவு விவகாரத்தில், காங்கிரஸ், திமுக காட்டிய அலட்சியத்தால் ஏழை மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், என்று பிரதமர் மோடி பேசியதாக ஏப்ரல் 01, 2024 அன்று தந்தி தொலைக்காட்சி ஒரு செய்தி அட்டை  வெளியிட்டிருந்ததை காணமுடிந்தது.

இதிலிருந்து, பரவக்கூடிய தந்தி டிவி செய்தி அட்டை போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது.

 முடிவு :

நம் தேடலில், கச்சத்தீவு மீட்புக் குழுவின் தலைவராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நியமனம் எனப் பரவும் தந்தி டிவி செய்தி அட்டை போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 

Please complete the required fields.




Back to top button
loader