இஸ்ரேல் போர் விமானத்திற்கு “சௌம்யா” என பெயரிட்டதாக ஃபோட்டோஷாப் வதந்தி !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
பாலஸ்தீனிய ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த சௌம்யா என்ற பெண் உயிரிழந்த செய்தி அதிகாரப்பூர்வமாக இந்திய அரசு தரப்பில் வெளியாகியது.
ஹமாஸ் குழுவின் தாக்குதலுக்கு எதிராக காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதனால் இஸ்ரேல் மற்றும் காஸா பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், ஹமாஸ் குழு நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இந்திய பெண் சௌம்யாவின் பெயரை இஸ்ரேல் ராணுவத்தின் போர் விமானத்திற்கு சூட்டி உள்ளதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் இந்தியா அளவில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
இந்திய அளவில் வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2021 மார்ச் 22ம் தேதி gushiciku எனும் சீன இணையதள பக்கத்தில் இதே புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
மேற்கொண்டு தேடுகையில், மற்றொரு சீன தளமான daydaynews இணையத்தில் 2020-ல் மற்ற போர் விமான புகைப்படங்களின் தொகுப்பில் இப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.
இஸ்ரேலின் பாதுகாப்பு படை ட்விட்டர் பக்கத்தில், தங்களுடைய நாட்டின் போர் விமானத்தில் சௌம்யா என பெயர் சூட்டப்பட்டதாக எந்த பதிவும் இல்லை.
முடிவு :
நம் தேடலில், இஸ்ரேல் தனது போர் விமானத்தில் உயிரிழந்த இந்தியப் பெண் சௌம்யாவின் பெயரை சூட்டியதாக கடந்த ஆண்டே வெளியான சீனாவைச் சேர்ந்த J10 போர் விமானத்தில் ஃபோட்டோஷாப் செய்து பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.