ஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா?

பரவிய செய்தி

ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் நடிகை காஜல் அகர்வாலுக்கு முத்தம் !

மதிப்பீடு

சுருக்கம்

முழு வீடியோ பார்க்கையில் தவறென தெரிகிறது. பேசுகிறார்களே தவிர முத்தம் கொடுக்கவில்லை.

விளக்கம்

கோவை ஈஷா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி பிரமாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம்.நேற்று இரவு நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் கலந்து கொண்டார். பல்லாயிரக்கணக்கான மக்களும் பிரபலங்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அதில் ஜக்கி வாசுதேவ் நடிகை காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுத்ததாக ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதை குறித்து நாம் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோவில் பார்க்கையில் இது தவறாக செய்தி என அறிய முடிந்தது. ஜக்கி வாசுதேவ் அவரின் கம்மலை காட்டி ஏதோ பேசுகிறார் அங்கு அதிக சத்தமாக இருந்ததால் காஜலுக்கு சரியாக கேட்கவில்லை. அதனால் அவர் அருகில் சென்று கேட்டு தன் காதில் இருக்கும் கம்மலை தொட்டு பார்த்து பிறகு சிரித்து கொண்டே பதிலளித்தது தெளிவாக தெரிகிறது.
வீடியோ கீழே :

எனவே ஜக்கி வாசுதேவ் நடிகை காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுத்ததாக பரவும் செய்தி உண்மை இல்லை.

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close