இஸ்ரேலிய கல்லூரி பெண், இந்திய ஜேஎன்யு கல்லூரி ஆணின் புகைப்படம் என இந்து மக்கள் கட்சி பரப்பும் பொய் !

பரவிய செய்தி

இஸ்ரேலிய கல்லூரி பெண்.. இந்திய JNU கல்லூரி ஆண்

X post link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

ஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பிற்கும் இடையேயான போரில் பொதுமக்கள் கொல்லப்படும் கொடுமை அரங்கேறி வருகையில், சமூக வலைதளம் முழுவதும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களுமே பரப்பப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், இஸ்ரேலில் உள்ள கல்லூரி பெண் கையில் துப்பாக்கியுடன் நிற்கிறார், ஆனால் இந்தியாவின் ஜே.என்.யு கல்லூரியில் படித்த ஆண் ஒருவர் பெண் உடையில் இருப்பதாக ஒப்பிட்டு இப்படங்களை இந்து மக்கள் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றனர்.

உண்மை என்ன ? 

இந்து மக்கள் கட்சி பகிர்ந்த புகைப்படத்தில் முதலில் உள்ள பெண்ணின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், புகைப்பட விற்பனை இணையதளங்களான istockphotoல் 2021ம் ஆண்டிலும், alamy-ல் 2020ம் ஆண்டிலும் இப்புகைப்படம் பதிவிடப்பட்டு இருக்கிறது.

அந்த புகைப்படத்தின் கீழே, அழகான தொழில்முறை பெண் உளவு அதிகாரி மெய்க்காப்பாளர் துப்பாக்கியுடன் போஸ் கொடுக்கிறார் என்றுள்ளது. இந்த புகைப்படத்தின் கிரெடிட் guruXOOX என்ற ஐடிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த ஐடி-யை கிளிக் செய்த போது அதே பெண்ணின் வேறு சில புகைப்படமும் கிடைத்தது. அதில் எங்கும் இஸ்ரேல் எனக் குறிப்பிடவில்லை.

அடுத்ததாக, சேலை அணிந்து இருக்கும் நபரின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2021ம் ஆண்டு டிசம்பரில் thebongmunda – Pushpak Sen எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Pushpak Sen (@thebongmunda)

Instagram post link 

புஷ்பாக் சென் குறித்து தேடுகையில், அவர் கொல்கத்தாவைச் சேர்ந்த பேஷன் ஸ்டைலிஸ்ட் என்பதை அறிய முடிந்தது. இதற்கு முன்பாகவும், ஜே.என்.யு மாணவர் எனக் கூறி புஷ்பாக் சென் உடைய வேறு சில புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலான போது, அதுகுறித்து உண்மையை யூடர்ன் ஆங்கிலத்தில் கட்டுரை வெளியிட்டு இருக்கிறது.

Signal Hire’ எனும் இணையதளத்தில், புஷ்பாக் சென் தன்னுடைய பி.ஏ பட்டத்தை அசுதோஷ் கல்லூரியிலும், எம்.ஏ பட்டத்தை கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும், பி.ஜி டிப்ளோமாவை தி ஸ்டேட்ஸ்மேன் ஸ்கூல் ஆப் பிரிண்ட் ஜர்னலிசத்திலும், முதுகலைப் பட்டத்தை இத்தாலியின் பொலிமோடாவிலும் படித்துள்ளதாக இடம்பெற்று இருக்கிறது. அவர் ஜே.என்.யு மாணவர் அல்ல என்பதை அறிய முடிகிறது. 

முடிவு : 
நம் தேடலில், இந்து மக்கள் கட்சியின் பதிவில் உள்ள இஸ்ரேல் கல்லூரி பெண் எனும் புகைப்படம் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தது அல்ல, அது புகைப்பட விற்பனை தளங்களில் விற்கப்படும் புகைப்படம் என்பதையும், ஜே.என்.யு மாணவர் எனும் புகைப்படத்தில் உள்ளவர் கொல்கத்தாவைச் சேர்ந்த பேஷன் ஸ்டைலிஸ்ட் என்றும், அவர் ஜே.என்.யு மாணவர் அல்ல என்பதையும் அறிய முடிகிறது.
Please complete the required fields.




ஆதாரம்

Sanmuga Raja

Sanmuga Raja working as Senior Sub-Editor at YouTurn since May 2017. He holds a Bachelor’s degree in Engineering. His role is to analyze and obtain valid proof for social media and other viral hoaxes, then write articles based on the evidence. In obtaining the proof for claims, he also interviews people to verify the facts.
Back to top button
loader