இத்தாலி கோவிட்-19 மோசடியை அம்பலப்படுத்தியதா ?| வைரலாகும் சதிக் கோட்பாடு !

பரவிய செய்தி

வாட்ஸ்ஆப் தகவல் : * கோவிட் -19ல் இருந்து இறந்த உடலில் பிரேத பரிசோதனை (பிரேத பரிசோதனை) செய்த முதல் நாடாக இத்தாலி திகழ்கிறது, மேலும் விரிவான விசாரணையின் பின்னர் கோவிட் -19 வைரஸாக இல்லை என்று கண்டறியப்பட்டது, மாறாக இது மிகவும் ஒரு பெரிய உலகளாவிய மோசடி உள்ளது. “பெருக்கப்பட்ட உலகளாவிய 5 ஜி மின்காந்த கதிர்வீச்சு (விஷம்)” காரணமாக மக்கள் உண்மையில் இறந்து கொண்டிருக்கிறார்கள். *

கரோனா வைரஸால் இறக்கும் மக்களின் சடலங்கள் குறித்து பிரேத பரிசோதனை (பிரேத பரிசோதனை) செய்ய அனுமதிக்காத உலக சுகாதார அமைப்பு (WHO) சட்டத்தை இத்தாலியில் உள்ள மருத்துவர்கள் மீறியுள்ளனர், எனவே சில அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் விசாரணையின் பின்னர், இந்த முகவரி இது ஒரு வைரஸ் அல்ல, ஆனால் மரணத்தை ஏற்படுத்தும் ஒரு பாக்டீரியம், இதன் காரணமாக நரம்புகளில் இரத்த நாளங்கள் உருவாகின்றன, அதாவது, இந்த பாக்டீரியாவின் காரணமாக, நரம்புகள் மற்றும் நரம்புகளில் இரத்தம் குவிந்து இந்த நோயாளி மரணத்திற்கான காரணியாகிறது.

மதிப்பீடு

விளக்கம்

இத்தாலியில் உள்ள மருத்துவர்கள் உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளை மீறி கோவிட்-19 ஆல் இறந்தவர்களின் உடலில் நடத்திய பிரேத பரிசோதனையில் பல திடுக்கிடும் உண்மைகளை கண்டறிந்ததாகவும், இதனை இத்தாலி சுகாதார அமைச்சகமே வெளியிட்டதாகவும் வாட்ஸ் அப் ஃபார்வர்டு தகவல் ஒன்று உலக அளவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அந்த ஃபார்வர்டு தகவல் தற்போது தமிழிலும் பரப்பப்பட்டு வருகிறது.

Advertisement

Facebook link | archive link 

உண்மை என்ன ? 

வைரலாகும் ஃபார்வர்டு தகவலில் உள்ள முக்கிய கூற்றுகள்,

  • கோவிட்-19 தொற்றால் இறந்தவர்களின் உடலைகளை பிரதேப் பரிசோதனை செய்ய WHO அனுமதிக்கவில்லை.
  • கோவிட்-19 நோயாளிகளுக்கு பிரேதப் பரிசோதனை செய்த முதல் நாடு இத்தாலி
  • கோவிட்-19 ஒரு வைரஸ் இல்லை, பாக்டீரியா.
  • கோவிட்-19 5ஜி கதிர்வீச்சால் பெருகியது.
  • நரம்புகளில் இரத்தம் குவிந்து நோயாளி மரணத்திற்கான காரணியாகிறது
  • இத்தாலி சுகாதார அமைச்சகம் கோவிட்-19 சிகிச்சை நெறிமுறைகளை மாற்றியது.
  • இத்தாலி கோவிட்-19ஐ வென்றது.

கோவிட்-19 தொற்றால் இறந்தவர்களின் உடலைகளை பிரதேப் பரிசோதனை செய்ய WHO அனுமதிக்கவில்லை :

கோவிட்-19 தொற்றால் இறந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்ய உலக சுகாதார அமைப்பு அனுமதி அளிக்கவில்லை மற்றும் அதனுடைய சட்டத்தை இத்தாலி மருத்துவர்கள் மீறியதாகக் கூறுவது எல்லாம் தவறான தகவலே. உலக சுகாதார அமைப்பு அப்படி எந்தவொரு சட்டத்தையும் கொண்டிருக்கவில்லை. மாறாக, கோவிட்-19 ஆல் இறந்தவர்களின் உடல்களை எவ்வாறு கையாள வேண்டும் எனும் வழிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது.

Advertisement

கோவிட்-19 நோயாளிகளுக்கு பிரேதப் பரிசோதனை செய்த முதல் நாடு இத்தாலி :

உலகிலேயே கோவிட்-19 ஆல் இறந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்த முதல் இத்தாலி இல்லை. இதற்கு முன்பாக, 2020 பிப்ரவரி மாதமே சீனாவில் பிரேதப் பரிசோதனை செய்து இருக்கிறார்கள்.

கோவிட்-19 ஒரு வைரஸ் இல்லை, பாக்டீரியா : 

உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில் கோவிட்-19 ஒரு வைரஸ் என்றேக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். உலகளாவிய சோதனைகள், ஆய்வுக் கட்டுரைகள் அடிப்படையில் தற்போது உள்ள பெருந்தொற்றான கோவிட்-19 நோவல் கொரோனா வைரசால் ஏற்படுகிறது என மருத்துவ தரவுகள் வெளியாகி இருக்கிறது. இத்தாலி சுகாதார அமைச்சகம் கோவிட்-19 தொற்றை பாக்டீரியா எனக் கூறியதாக ஆதாரங்கள் இல்லை.

கோவிட்-19 5ஜி கதிர்வீச்சால் பெருகியது :

கோவிட்-19 அதிக அளவில் பெருக 5ஜி தொழில்நுட்பம் காரணம் எனும் ஆதாரமற்ற தகவலையும் இணைத்து உள்ளார்கள். இந்தியாவில் 5ஜி சேவையே வெளியிடவில்லை, ஆனால் உலக அளவில் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. கோவிட்-19 உடன் 5ஜி தொழில்நுட்பத்தை இணைத்து வதந்திகள் பரவுவதாக ஆகஸ்ட் மாதமே யுஎன் ஐசிடி ஏஜென்சி அளித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

நரம்புகளில் இரத்தம் குவிந்து நோயாளி மரணத்திற்கான காரணியாகிறது :

கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டவர் இறப்பதற்கு முக்கிய காரணம் உடலில் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் பாதிப்புகள் அல்ல, சுவாசப் பிரச்சனையே முக்கிய காரணம் என ஆய்வுகள், மருத்துவ தரவுகள் எடுத்துரைக்கின்றன.

இத்தாலி சுகாதார அமைச்சகம் கோவிட்-19 சிகிச்சை நெறிமுறைகளை மாற்றியது :

ஃபார்வர்டு செய்யப்படும் தகவல் ஆங்கிலத்தில் ஜூன் மாதமே பரப்பப்பட்டு இருக்கிறது என்பதை அறிய முடிந்தது. இத்தாலி நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் கோவிட்-19 தொடர்பான நெறிமுறைகளை மாற்றியதாக எந்தவொரு தகவலும் இல்லை மற்றும் தற்போது வரை நோவல் கொரோனா வைரசால் கோவிட்-19 ஏற்படுவதாகவே கருதுகின்றனர்.

அஸ்பிரின் போன்ற மருந்துகள் காய்ச்சலை குறைக்கவும், தசை வலி, பல் வலி, சளி, தலைவலி போன்ற நிலைமைகளில் எழும் வலிகளில் இருந்து நிவாரணம் பெற பொதுவாக பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

இத்தாலி கோவிட்-19ஐ வென்றது :

செப்டம்பர் 23-ம் தேதி வரையில் இத்தாலி நாட்டில் 45,489 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இத்தாலி கோவிட்-19 பாதிப்பை முழுமையாக வெல்லவில்லை.

இப்படி உண்மைக்கு மாறாக, ஆதாரமற்ற தகவலை இணைத்த ஃபார்வர்டு தகவல் உலக அளவில் வைரல் செய்யப்படுகிறது.  இதற்கு ஆதாரம் என இத்தாலி சுகாதார அமைக்கத்தின் பெயரை மட்டுமே குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால், இத்தாலி சுகாதார அமைக்கத்தின் இணையதளத்தில் அப்படி எந்தவொரு தகவலும் இல்லை. தவறான தகவல்கள் பலவற்றை ஒருங்கிணைத்து இந்த ஃபார்வர்டு தகவலை உருவாக்கி இருக்கிறார்கள். சதிக் கோட்பாடுகள் பொய்கள் நிறைந்ததாகவும், ஆதாரமற்றவையாகவும் விளங்குகின்றன. கோவிட்-19 பாதிப்பு தொடங்கியதில் இருந்து பல்வேறு சதிக் கோட்பாடுகள் உலக அளவில் வைரலாகின. இதுபோன்ற தகவல்களை உண்மை என நினைத்து மக்களும் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். பெருந்தொற்று காலத்தில் ஆதாரமற்ற தகவல்களை உண்மை என்று நினைத்து கடைபிடிக்க வேண்டாம் மற்றும் பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button