வயநாட்டில் பாகிஸ்தான் கொடியை பயன்படுத்தியதாகப் பரப்பப்படும் வதந்தி !

பரவிய செய்தி

*வயநாட்டில் காங்கிரஸ் ராகுல் காந்தியை ஆதரித்து பாகிஸ்தான் கொடியை அசைத்து ஆதரவு தெரிவிக்கிறார்கள். தயவு செய்து திருந்துங்கள்.*

Twitter Link

மதிப்பீடு

விளக்கம்

2024 மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி தொடங்கவுள்ளது. தேர்தலையொட்டி இந்தியா முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

https://twitter.com/Narasim18037507/status/1777495313588400187

இந்நிலையில் கேரளா மாநிலம் வயநாட்டில் பாகிஸ்தான் கொடியுடன் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிப்பதாக 46 வினாடி  வீடியோ ஒன்றை பாஜகவினர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். 

உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீஃப்ரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது தற்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது. இந்த வீடியோ 2019ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது எனத் தெரியவந்தது.

மேலும் , இந்த வீடியோவில் ’Aramana Silks’ என்ற கடையின் பெயரை பார்க்க முடிகிறது. அந்தப் பெயரைக் கொண்டு Google Map Street View மூலம் தேடியதில், அக்கடை காசர்கோட் பகுதியில் இருப்பதை அறிய முடிந்தது. பரவக் கூடிய வீடியோவில் Aramana Silks பக்கத்தில் vivo கடை இருப்பதையும் அதே கடையை Google street view-ல் காண முடிகிறது. 

பரவக் கூடிய வீடியோவில் பிறை நிலா மற்றும் நட்சத்திரம் உள்ள பச்சை நிற கொடிகள் உள்ளன. இது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியின் கொடி. இதனை பாகிஸ்தான்  கொடி எனத் தவறாகப் பரப்புகின்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடியை பாகிஸ்தான் கொடி என பரப்புவது இது முதன்முறையல்ல. இதற்கு முன்னர் பல்வேறு சமயங்களில் தவறாக பரவியபோது அதன் உண்மைத் தன்மை குறித்து யூடர்ன் கட்டுரை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க : கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால் பாகிஸ்தான் கொடியை ஏற்றியதாகப் பரப்பப்படும் வதந்தி !

மேலும் படிக்க : மசூதியை இடித்த உ.பி அரசு.. பாகிஸ்தான் கொடியை ஏற்றியதால் இடித்ததாக பாஜகவினர் பரப்பும் வதந்தி !

முடிவு:

பாகிஸ்தான் கொடியுடன் ராகுல் காந்திக்கு வயநாட்டில் ஆதரவு தெரிவிப்பதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அதில் இருப்பது பாகிஸ்தான் கொடி அல்ல, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கொடியாகும். மேலும் இந்த வீடியோ 2019ம் ஆண்டு காசர்கோடு பகுதியில் எடுக்கப்பட்டது.

Please complete the required fields.
Back to top button
loader