This article is from Sep 01, 2019

அலிபாபா நிறுவனர் காடுகளை பாதுகாக்க அமெரிக்காவில் நிலம் வாங்கினாரா ?

பரவிய செய்தி

சீனாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான ஜாக் மா, மரம் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் சுரங்க நிறுவனங்களிடம் இருந்து பாதுகாக்க மற்றும் நிலத்தை வன சரணாலயமாக மாத்திட அமெரிக்காவின் வனாந்திரத்தில் 28,000 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார்.

மதிப்பீடு

விளக்கம்

சீனாவின் செல்வந்தர்களில் ஒருவரும், அலிபாபா எனும் மாபெரும் இ-காமெர்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஜாக் மா அமெரிக்காவின் நியூயார்க் ஸ்டேட்டின் Adirondacks எனும் பகுதியில் 28,100 ஏக்கர் நிலப்பரப்பை விலைக்கி வாங்கி, இயற்கையான பகுதியை பாதுகாக்க உள்ளதாக மீம் பதிவை கண்டோம். அதன் உண்மைத்தன்மையை அறிந்து கூறுமாறு ஃபாலோயர் ஒருவர் கேட்டுக் கொண்டார்.

ஜாக் மா அமெரிக்காவில் நிலம் வாங்கியது குறித்து தேடிய பொழுது பல செய்தி தளங்களில் அவர் குறித்த செய்திகள் வெளியாகி இருக்கின்றனர். 2015-ல் ஜூனில் Adirondacks பகுதியில் நிறைந்த மரங்கள்,ஏரிகள், நீரோடைகள் உள்ளிட்டவை அடங்கிய 28,100 ஏக்கர் நிலத்தை 23 மில்லியன் டாலர்கள் மதிப்பில் ஜாக் மா வாங்குவதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சீனாவின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் ஆர்வலரான ஜாக் மா, தனியாருக்கு சொந்தமான இயற்கையான பகுதியை விலைக்கு வாங்கி, அங்கு வாழ்ந்து வரும் வெள்ளை நிற வால் கொண்ட மானின் வாழ்விடத்தை பேணி பாதுகாப்பது மற்றும் மர தொழில்கள், சுரங்கம், பேப்பர் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் இருந்து மரங்கள் மற்றும் நீர் நிலைகளை பாதுகாக்க இருப்பதாக ஜாக் மா உடைய செய்தித்தொடர்பாளர் The Wall Street Journal என்ற பத்திரிகைக்கு முதன் முதலில் தெரிவித்து இருக்கிறார்.

” சர்வதேச நிலம் வாங்குதலில் இருந்து ஜாக் மா, நாம் அனைவரும் ஒரே கிரகத்தில் வாழ்கிறேன் மற்றும் ஒரே காற்றை சுவாசிக்கிறோம், எதிர்காலத்தில் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்க போகிறோம் என்பதன் மீது நம்பிக்கை கொண்டு உள்ளார் ” என செய்தித்தொடர்பாளர் ஜிம் வில்லியம்சன் கூறி இருந்தார்.

வனப்பகுதி சூழ்ந்த இடத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் 28,100 ஏக்கர் நிலத்தை வாங்க உள்ளதாகவும், எப்பொழுதாவது தன்னுடைய விடுமுறை காலங்களில் அங்கு சென்று பொழுதை கழிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.

ஜாக் மா தன்னுடைய சொந்த நாடான சீனாவில் இயற்கை பாதுகாப்பு தொடர்பாக Sichuan Nature Conservation Foundation மற்றும் Laohegou Nature Reserve in Sichuan ஆகியவற்றை உருவாக்க பல நிதியுதவிகளை அளித்து உள்ளதாக 2015 செய்திகளில் கூறப்பட்டுள்ளது. 2014-ல் ஜாக் மா தொடங்கிய தொண்டு நிறுவனமானது ஒரே ஆண்டில் 3 பில்லியன் டாலர்கள் நன்கொடையை பெற்றது.

முடிவு :

சீனாவின் பெரும் செல்வந்தரான அலிபாபா நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் மா அமெரிக்காவில் 28,000 ஏக்கர் நிலத்தை வாங்கி இயற்கையை பாதுகாக்க உள்ளதாக வெளியான செய்தி உண்மையே. இது தொடர்பான செய்திகள் 2015 ஜூன் மாதத்தில் சர்வதேச செய்தி நிறுவனங்களில் வெளியாகி இருக்கிறது. எனினும், அந்த பகுதி அவர்களின் சொந்த பயன்பாட்டிற்கும் உட்படுத்தப்படும் என்பது கூடுதல் தகவல்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader