ஜப்பான் செய்தித்தாளை மண்ணில் இட்டால் செடியாக முளைக்குமா ?| பசுமை செய்தித்தாள்.

பரவிய செய்தி
ஜப்பானின் செய்தித்தாள் தனக்குள் விதைகளைக் கொண்டிருக்கிறது . எனவே , அதனை பயன்படுத்திய பிறகு செடியாக வளர்கிறது .
மதிப்பீடு
விளக்கம்
ஜப்பான் நாட்டில் வெளியிடப்படும் செய்தித்தாளை மண்ணில் வைத்து தண்ணீர் ஊற்றி வந்தால் செடியாக வளர்வதாக செய்தித்தாளில் செடிகள் முளைக்கும் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படங்களை பகிர்ந்து, அதன் உண்மைத்தன்மை குறித்து யூடர்ன் ஃபாலோயர் தரப்பில் கேட்கப்பட்டு இருந்தது.
JAPAN MADE NEWSPAPERS WITH SEEDS IN THEM SO THEY CAN BECOME PLANTS AGAIN AFTER USE AND THAT JUST MADE MY ENTIRE DAY pic.twitter.com/Z3abZnF5o1
— momo (@guacamomole) October 17, 2016
ஒரு பொருளை பயன்படுத்திய பிறகு வீசி சென்றால் செடியாக, மரமாக முளைக்கும் வகையில் விதைகளை பொருத்தி இருப்பது சமீபகாலமாக பெரிதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், மக்கள் தினமும் பயன்படுத்தும் செய்தித்தாளில் விதைகள் பொருத்தி இருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.
2016 பிப்ரவரி 11-ம் தேதி lifegate எனும் ஆன்லைன் ரேடியோ இணையதளத்தில் “Japan, the newspaper that becomes a plant (again) ” என்ற தலைபில் ஜப்பான் நாட்டில் வெளியாகும் பசுமை செய்தித்தாள் குறித்து கட்டுரை வெளியிட்டு இருந்தனர். இதன் பிறகே , புகைப்படங்கள் , செய்திகள் உலகம் முழுவதும் வலம் வந்துள்ளது .
இத்தகைய பசுமை செய்தித்தாளை ஜப்பான் நாட்டின் பிரபல செய்தித் தாளான ” The Mainichi Shimbunsha ” வெளியிட்டதாக குறிப்பிட்டு உள்ளனர். செய்தித்தாள்களை படித்த பிறகு மீண்டும் மறுப்பயன்பாட்டிற்கு சென்று விடும். அதில், இறுதியாகவோ அல்லது செய்தித்தாளின் சிறு பகுதியை மண்ணில் இட்டு தண்ணீர் ஊற்றி வந்தால் செடியாக மாறுகிறது என்கிறார்கள்.
ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய விளம்பர நிறுவனங்களில் ஒன்றான Dentsu Inc ஆனது Mainichi செய்தித்தாள் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்டுள்ளனர். இத்தகைய சுற்றுச்சூழலுக்கு இணக்கமான செய்தித்தாள் நல்ல வெற்றியையும் கண்டது. இந்த செய்தித்தாள் நாளொன்றுக்கு 4 மில்லியன் பிரதிகளை நாடு முழுவதிலும் விற்பனை செய்து உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
இதற்கு முன்பாக, 2015 ஆகஸ்ட் 20-ம் தேதி விளம்பர நிறுவனத்தின் Copy writer ஆன KOSUKE TAKESHIGE உடைய யூட்யூப் சேனலில் ” Green Newspaper / THE MAINICHI NEWSPAPERS ” பசுமை செய்தித்தாள் குறித்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது .
செய்தித்தாளில் செடிகள் முளைப்பது போன்று காண்பித்து இருக்கும் புகைப்படங்கள் விளம்பரத்திற்காக உருவாக்கப்பட்டவை. பசுமை செய்தித்தாள் என கூறப்படும் அவற்றை கிழித்து மண்ணில் புதைத்து தண்ணீர் ஊற்றி வந்தால் செடி முளைப்பதாக விளம்பரத்தில் காண்பித்து உள்ளனர். அந்த செய்தித்தாளில் ” Green Newspaper ” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
முடிவு :
நம்முடைய தேடலில் , ஜப்பான் நாட்டில் பசுமை செய்தித்தாள் என விதைகளை கொண்ட செய்தித்தாளை விற்பனை செய்யும் முயற்சியை மேற்கொண்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மையே. இதுதொடர்பாக , 2015-ல் இருந்தே தகவல்கள் இருக்கின்றன .
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.