ஜப்பான் நாட்டில் இஸ்லாமிய மதம் பரவத் தடையா ?

பரவிய செய்தி

ஜப்பான் நாட்டில் இஸ்லாம் விரிவதை தவிர்க்க இஸ்லாம் மதத்திற்கும், அனைத்து முஸ்லீகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய பிரசாத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நாடு ஜப்பான்.

மதிப்பீடு

சுருக்கம்

ஜப்பான் நாட்டில் இஸ்லாமிய மதத்திற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக இணையத்தில் பரவிய படத்தை வைத்து இவ்வாறான பதிவை தமிழில் பதிவிட்டு உள்ளனர். ஆனால், ஆங்கிலத்தில் பரவிய இஸ்லாம் மதம் பற்றிய பதிவில் அனைத்தும் தவறானவை அல்லது தவறாக புரிந்து கொள்ளபட்டவையே.

விளக்கம்

ஜப்பான் நாட்டில் இஸ்லாமிய மதம் விரிவடையாமல் இருக்க இஸ்லாம் மதத்திற்கும், அங்கு வாழும் முஸ்லீம் இன மக்களுக்கும் தடை விதித்ததாகவும், அந்த கட்டுப்பாடுகள் இடம்பெற்ற படம் இதுவே.

குடியுரிமை :

முஸ்லீம் இன மக்களுக்கு குடியுரிமை வழங்காத ஒரே நாடு ஜப்பான் மட்டுமே எனக் கூறியுள்ளனர்.

ஜப்பான் நாட்டில் குடியுரிமை பெறுபவர்களின் மதம் சார்ந்த விவரங்களை அந்நாடு வெளியிட விரும்பவில்லை. ஆகையால், குடியுரிமை விண்ணப்பத்தில் பாலினம் மற்றும் முன்பு வசித்த நாடு குறித்தே விவரங்களே கேட்கப்படும்.

நிரந்தர வசிப்பிடம் :

முஸ்லீம் இன மக்களுக்கு நிரந்தரமான வசிப்பிடம் அளிப்பதில்லை என இரண்டாவதாக கூறியுள்ளனர்.

Immigration bureau of japan வெளியிட்ட நிரந்தர வசிப்பிடங்களுக்கான அனுமதி பற்றிய வழிகாட்டுதல்களில் அவ்வாறான எந்தவொரு விதிமுறையையும் குறிப்பிடவில்லை.

பிரச்சாரத்திற்கு தடை :

2014-ல் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, இஸ்லாமிய மக்களின் நம்பிக்கையை மதிப்பதாக தெளிவாக வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

ஜப்பான் நாட்டில் இஸ்லாமிய பிரச்சாரத்திற்கு தடைகள் ஏதும் விதிக்கப்பட்டவில்லை.

அரபிக் மொழியில் பாடமில்லை :

அரேபிய மொழியை ஜப்பான் கல்லூரிகளில் கற்பிப்பது இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், டோக்கியோவில் உள்ள “ Arabic Islamic institute in Tokyo “-வில் அரபிக் வகுப்புகள் நடைபெறுகின்றன.

முஸ்லீம் நாடுகளில் தூதரகமில்லை :

உலகிலேயே ஜப்பான் நாடு மட்டும் தான் முஸ்லீம் நாடுகளில் தூதரகத்தை புறக்கணித்து உள்ளது என செய்தியில் இடம்பெற்றுள்ளது.

அது தவறு, ஜப்பான் நாட்டின் தூதரகங்கள் ஆப்கானிஸ்தான், கத்தார், பங்களாதேஷ், பக்ரைன், ஓமன் உள்ளிட்ட பெருவாரியான இஸ்லாமிய நாடுகளிலும் இருப்பதை ஜப்பான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.

அரபி மொழி குரானுக்கு தடை :

அரபி மொழியில் இருக்கும் குரான் நூல்களை இறக்குமதி செய்ய தடை உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

முஸ்லீம் மக்கள் வசிக்கும் பல பகுதிகளில் பல்வேறு மசூதிகள் இயங்கி வருகின்றன. மசூதியில் குரானிக் பாடங்கள் மற்றும் அரபிக் மொழி கற்பிக்கப்படுவதாக ஜப்பானில் வாழும் மக்களைப் பற்றிய கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தடை என்பது தவறான தகவல்.

முஸ்லீம்களுக்கு வாடகைக்கு வீடு இல்லை :

தோராயமாக 1,00,000 முஸ்லீம் மக்கள் வசிக்கும் ஜப்பான் நாட்டில் அனைவருக்கும் சொந்தமான வீடு என்பது இருக்க வாய்ப்பில்லை. ஆகையால், பெரும்பாலானோர் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கின்றனர்.

ஜப்பான் நாட்டில் வசிக்கும் அனைத்து மத மக்களுக்கும் தங்களின் மதத்தை பின்பற்ற உரிமைகள் உள்ளன. அதற்கான உரிமையை ஜப்பான் அரசியலமைப்பு சட்டம் Article 20 வழங்குகிறது.

ஜப்பான் நாடு இஸ்லாமிய மதம் விரிவடைவதை தடுப்பதாக கூறுவது முற்றிலும் தவறு. அதற்கு மாறாக நாட்டின் குறியேற்றத்திற்கான கொள்கைகள் இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.

1982-ல் ஜப்பான் நாட்டில் இருந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 30,000 மட்டுமே. அந்நாட்டில் மதத்திற்கான சுதந்திரம் கிடைப்பதால் தற்போது இஸ்லாமியர்களின் எண்ணிக்கை தோராயமாக 1,00,000-ஐ கடந்து செல்கிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button