ஜப்பான் ராணுவ அணிவகுப்பில் ராட்சத மனிதன்| ரகசிய வீடியோவா ?

பரவிய செய்தி

ஜப்பான் நாட்டின் ராட்சத மனிதரின் ரகசிய வீடியோ !

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

” மக்கள் கையில் கொடிகளுடன் ஆரவாரமாக இருக்க குதிரையில் அமர்ந்து வருபவருக்கு பின்னால் மலை போல ஒரு உருவம் நடந்து வரும் காட்சியில் தொடங்குகிறது அந்த வீடியோ. பின்னர் அந்த உருவத்துடன் புகைப்படம் எடுக்க தயாராக இருக்கிறார்கள். இறுதியாக ஒரு கடை போன்ற இடத்தில் ஒரு கதவிற்கு பின்னால் இருந்து அந்த உருவத்தின் முகம் வெளியே தெரிகிறது ” என இத்தகைய காட்சிகளைக் கொண்ட வீடியோ யூடியூப் தளத்தில் பரவிக் கொண்டிருக்கிறது.

Advertisement

Youtube link | Archive link

மேற்காணும் வீடியோ இணைப்பை அனுப்பிய ஃபாலோயர் இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு கேட்டு இருந்தார். பல ஆண்டுகளுக்கு முன்பாக ஜப்பான் நாட்டின் ராணுவ அணிவகுப்பில் ராட்சத மனிதன் கலந்து கொண்ட ரகசிய வீடியோ எனக் கூறி உலக அளவில் கடந்த சில ஆண்டுகளாகவே இவ்வீடியோ பதிவாகி வருகிறது.

உண்மை என்ன ?

மேற்காணும் காட்சிகள் திரைப்படங்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பாக 1800-களின் முற்பகுதியில் இருந்து வந்ததாக சிலர் கூறுகின்றனர். பார்ப்பதற்கு சுமோ வீரரைப் போல் இருப்பதால், சிலர் மிகப்பெரிய சுமோ மல்யுத்த வீரர் எனக் கூறி வருகின்றனர். மேலே காண்பிக்கப்பட்ட வீடியோவில், Biblical Nephilim Giant எனும் வார்த்தையையும் கூட பயன்படுத்தி பேசி உள்ளார்கள்.

ஆனால், இப்படிக் கூறப்படும் தகவல்கள் அனைத்திற்கும் வீடியோவிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. ஜப்பான் நாட்டின் ரகசிய வீடியோ எனப் பரப்பப்படும் காட்சிகள் ஆனது 2007-ம் ஆண்டு வெளியான ” பிக் மேன் ஜப்பான் ” எனும் திரைப்படத்தின் ட்ரைலர் வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டதே.

Advertisement

இத்திரைப்படம் வினோதமான மற்றும் மிகப்பெரிய அளவில் இருக்கும் உயிரினங்களை வைத்து எடுக்கப்பட்ட நகைச்சுவை மற்றும் அறிவியல் சார்ந்த திரைப்படமாகும். பிக் மேன் ஜப்பான் ட்ரைலரில் இருந்த கருப்பு வெள்ளை காட்சிகளை மட்டுமே எடுத்து தவறாக பரப்பி இருக்கிறார்கள். அதன்பிறகு வரும் வண்ணக் காட்சிகளை நீக்கி உள்ளனர்.

முடிவு :

நம் தேடலில், ஜப்பான் நாட்டின் ராணுவ அணிவகுப்பில் ராட்சத மனிதன் கலந்து கொண்ட ரகசிய வீடியோ என பரவும் காட்சிகள் 2007-ல் வெளியான பிக் மேன் ஜப்பான் எனும் திரைப்படத்தின் ட்ரைலரில் இருந்து எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button