ஜப்பானின் இரு பெரும் பேரழிவிலும் அசையாத நாகசாகி நுழைவாயிலா?

பரவிய செய்தி
நாகசாகியில் 1945 ஆம் ஆண்டில் வீசப்பட்ட அணுகுண்டு தாக்குதலையும், 2011 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பேரழிவையும் கடந்து கம்பீரமாக நிற்கும் நுழைவாயில்.
மதிப்பீடு
சுருக்கம்
இரண்டும் வெவ்வேறு இடங்களில் உள்ள நுழைவாயில்கள் ஆகும். ஒன்று ஹிரோஷிமா, மற்றொன்று ஓட்சுசி இடங்களில் இருந்த நுழைவாயில்கள் ஆகும்.
விளக்கம்
இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுத் தாக்குதலிலும், 2011ல் ஏற்பட்ட சுனாமி பேரழிவிலும் நுழைவாயிலானது நிலைகுலையாமல் கம்பீரமாக நிற்கிறது என்றுக் கூறி இப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
நுழைவாயில் சேதமடையாமல் கம்பீரமாக இருந்தாலும், இச்செய்திகள் அனைத்தும் வதந்திகளே.! அந்த நுழைவாயிலைப் பற்றி விரிவாக தகவலை நாம் காணலாம். அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் 1945 ஆண்டில் ஆகஸ்ட் 6 தேதி ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது முதல் அணுகுண்டினை வீசியது. இந்த அணுகுண்டு தாக்குதலில் 70,000 ஜப்பானிய மக்கள் இறந்தனர், பலர் காயமடைந்தனர், பலர் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் நடந்து மூன்று நாட்களுக்கு பிறகு மற்றொரு அணுகுண்டை நாகசாகியின் மீது வீசியது.
இத்தாக்குதலுக்கு பிறகு ஹிரோஷிமா மற்றும் நாகசாகி பகுதியின் நிலையை புகைப்படங்களின் மூலம் அனைவரும் அறிந்திருப்போம். அப்புகைப்படங்களில் ஒன்றில் ஹிரோஷிமாவில் இருக்கும் நுழைவாயிலானது நிலைகுலையாமல் இருந்ததை காணலாம்.
2011 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி, இரண்டாம் உலகப் போருக்கு பின்பு ஜப்பானில் ஏற்பட்ட மிகப் பெரிய பேரழிவு ஆகும். இப்பேரழிவில் 10,000 அதிகமான மக்கள் உயிரிழந்தனர். மிகப்பெரிய இழப்புகள் ஏற்பட்டன. நாட்டில் பல பகுதிகள் சேதமடைந்தன.
ஓட்சுசி என்ற பகுதியில் சுனாமி பேரழிவால் கட்டிங்கள் பலத்த சேதமடைந்தன. எனினும் கான்கீரிட் கட்டிடங்கள் பெரும்பாலனவை சேதமடையவில்லை. மேலும் அப்பகுதியில் இருந்த நுழைவாயில் ஒன்று சேதமடையாமல் இருந்துள்ளது.
ஜப்பானின் ஹிரோஷிமா பகுதிகளில் ஏற்பட்ட அணுகுண்டு தாக்குதல் பேரழிவின் புகைப்படங்களையும், சுனாமியால் சேதமடைந்தப் பகுதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஒருமைப்படுத்திப் பார்த்தால் அதில் நுழைவாயில்கள் மட்டும் சேதமடையாமல் காட்சியளிக்கின்றன.
இந்நுழைவாயில்கள் மக்களுக்கும் நிலத்திற்கும் இடையேயான ஆன்மீகத் தொடர்பை வெளிப்படுத்துவதாக அம்மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். உயிர்களை காப்பாற்றும் நோக்கத்தில் சில கட்டமைப்புகளுக்கு இடையே கோயில்களின் பாரம்பரிய டோர்ல் நுழைவாயில்களை நிறுவியுள்ளனர். படத்தில் உள்ள நுழைவாயில்களும் இவ்வகையை சார்ந்தவையே.!
நுழைவாயில்கள் ஒரே வடிவத்தில் இருந்தாலும் வெவ்வேறு காலக்கட்டத்தில், வெவ்வேறு இடங்களில் இருந்தவை என்பதே உண்மை. ஒரு நுழைவாயிலானது ஹிரோஷிமாப் பகுதியில் இருந்தது, மற்றொன்று ஓட்சுசி பகுதியில் இருந்தவை. எனவே படத்தில் உள்ள நுழைவாயில்கள் வெவ்வேறானவை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.