ஜெயலலிதா உடன் நிர்மலா சீதாராமன் இருப்பதாக பரப்பப்படும் தவறான புகைப்படம் !

பரவிய செய்தி
நமது தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் ஜெயலலிதா இருக்கும் அரிதான புகைப்படம் .
மதிப்பீடு
விளக்கம்
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஒன்றாக இருக்கும் அரிதான புகைப்படம் என ஜெயலலிதாவின் இளமைக்காலத்தில் எடுக்கப்பட்ட இப்புகைப்படம் தொடர்ந்து பல ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களில் மீண்டும் பரப்பப்பட்டு வருகிறது.
பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் என்பதால் கட்சி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கிடையில், சமூக வலைதளங்களில் ஜெயலலிதா மற்றும் நிர்மலா சீதாராமன் ஒன்றாக இருப்பதாக இந்த புகைப்படமும் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் ஜெயலலிதா உடன் இருப்பது நிர்மலா சீதாராமன் அல்ல, ஜெயலலிதாவின் தோழி எழுத்தாளர் சிவசங்கரி. இந்த புகைப்படம் 2014-ல் vintageindianclothing எனும் இணையதளத்தில் பதிவாகி இருக்கிறது. அதில், ஜெயலலிதா சிவசங்கரி உடன் இருப்பதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
2018-ல் dtnext இணையதளத்தில் வெளியான செய்தியில், ஜெயலலிதாவும் சிவசங்கரியும் இருக்கும் வேறு சில புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தனர்.
முடிவு :
நம் தேடலில், தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் ஜெயலலிதா இருப்பதாக பரப்பப்படும் புகைப்படத்தில் இருப்பது நிர்மலா சீதாராமன் அல்ல, ஜெயலலிதாவின் தோழி எழுத்தாளர் சிவசங்கரி என அறிய முடிகிறது.