காமராஜர் புகைப்படத்திற்கு ஜெகன் மோகன் மரியாதை செலுத்தினாரா ? | வைரல் புகைப்படம் !

பரவிய செய்தி

காமராஜர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஜெகன் மோகன் ரெட்டி.

 

மதிப்பீடு

விளக்கம்

ந்திர மாநிலத்தின் முதல்வர் ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டியின் செயல்பாடுகளை சமூக வலைதளவாசிகள் பாராட்டும் பதிவுகளை காணாமல் இருக்க முடியாது. அவ்வாறான பதிவுகளில் ஒன்றாக மறைந்த ஐயா காமராஜர் அவர்களின் புகைப்படத்திற்கு ஜெகன் மோகன் மலர் தூவி மரியாதை செய்யும் புகைப்படம் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

காமராஜர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஜெகன் மோகன் ரெட்டி ” என்ற வாசகத்துடன் ஜெகன் மோகன் காமராஜரை வணங்கும் புகைப்படம் பதிவிடப்பட்டது. அதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு யூடர்ன் ஃபாலோயர் ஒருவர் கேட்டுக் கொண்டார். அதையடுத்து, அந்த புகைப்படத்தின் நம்பகத்தன்மையை ஆராய்ந்தோம்.

மேலும் படிக்க : கேரளா மலம்புழா அணை காமராஜர் காலத்தில் கட்டப்பட்டதா ?

உண்மை என்ன ?

காமராஜ் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஜெகன் மோகன் ரெட்டி என்ற வாசகத்தை வைத்து ஆராய்ந்த பொழுது 2019 ஜூலை 16-ம் தேதி சினிமா பேட்டை என்ற இணையதளத்தில் ” காமராஜரை வணங்கிய ஜெகன் மோகன் ரெட்டி.. தமிழக மக்களையும் கவர்ந்தார்.. வைரல் புகைப்படம் ” என்ற தலைப்பில் வைரலாகும் புகைப்படம் இடம்பெற்று இருந்தது.

website link | archived link

Advertisement

அதில், ஜூலை 15-ம் தேதி காமராஜரின் பிறந்தநாளன்று ஜெகன் மோகன் ரெட்டி காமராஜர் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தியதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், முதன்மை ஊடகச் செய்தியிலோ அல்லது செய்தித்தளங்களிலோ ஜெகன் மோகன் காமராஜரை வணங்கும் புகைப்படம் வெளியாகவில்லை.

இதையடுத்து, ” jagan mohan reddy tribute kamarajar ” என்ற ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி தேடிய பொழுது ஜெகன் மோகன் ரெட்டி வணங்கும் புகைப்படங்களில் வைரலான புகைப்படமும் இடம் பெற்று இருந்தது. ஆனால், அந்த புகைப்படத்தில் இருப்பது காமராஜர் அல்ல.

அந்த புகைப்படத்தில் இணைக்கப்பட்ட இணையதள லிங்கில் சென்று பார்க்கையில் புகைப்படத்திற்கு கீழே ” முதலமைச்சர் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி விஜயவாடாவில் அருகே உள்ள தடிப்பள்ளி முதல்வர் கேம்ப் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரான பாபு ஜெகஜீவன் ராமின் நினைவு நாளில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் ” என இடம்பெற்று இருக்கிறது.

டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு செய்தி நிறுவனத்தின் இணையதளத்திலும் ஜெகன் மோகன் அவர்கள் பாபு ஜெகஜீவன் ராம் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தியதாக புகைப்படத்தை வெளியிட்டு உள்ளன.

மேலும் படிக்க : ரஷ்ய பாராளுமன்றத்தில் காமராஜர் புகைப்படம். ஃபோட்டோஷாப் தொழிநுட்பமா ?

சமீபத்தில் இனி திருப்பதியில் விஐபி மற்றும் விவிஐபி தரிசனம் கிடையாது என அறிவிக்கப்பட்டதாக ஜெகன் மோகன் காமராஜரை வணங்கும் புகைப்படம் பகிரப்பட்டு 7 ஆயிரம் லைக்குகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்றது.

ஜூலை 17-ம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானம் அமைப்பின் சேர்மன் ஒய்வி சுப்பா ரெட்டி கூறுகையில், விஐபி தரிசனம் முறையை நீக்கி விட்டு அர்ச்சன அனந்தரா தரிசனம் முறையை மீண்டும் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக டைம்ஸ்நவ்நியூஸ் செய்தி தளத்தில் வெளியாகி இருக்கிறது.

முடிவு :

நமக்கு கிடைத்த ஆதாரங்களின் படி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் காமராஜர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதாக பகிரப்படும் புகைப்படம் போலியானவை.

பாபு ஜெகஜீவன் ராம் புகைப்படம் இருந்த இடத்தில் காமராஜர் புகைப்படத்தை போட்டோஷாப் செய்து தவறாக சமூக வலைதளங்களில் வைரலாக்கி உள்ளனர். போட்டோஷாப் புகைப்படங்களால் பெருமை ஏதுமில்லை. புகழ் பெற்றவர்களின் மதிப்பை குறைக்காமல் இருந்தாலே போதும்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button