ஜெல்லி மீன்கள் & கல் இறால்களுக்கு இறப்பே இல்லையா ?

பரவிய செய்தி

ஜெல்லி மீன்கள்(jellyfish) மற்றும் கல் இறால்கள்(lobster) உயிரியல் அடிப்படையில் அழிவில்லாதவை. அவைகளுக்கு வயதாவதில்லை மற்றும் கொல்லப்படும் வரை மரணிப்பதில்லை.

மதிப்பீடு

சுருக்கம்

ஜெல்லி மீன்களில் Turritopsis Nutricula என்ற வகையைச் சேர்ந்தவை மட்டும் உயிரியல் அடிப்படையில் அழிவில்லாதவையாக கருதப்படுகிறது. கல் இறால், மற்ற ஜெல்லி மீன்களுக்கு முதிர்வும், இறப்பும் உண்டு.

விளக்கம்

கடல்வாழ் உயிரினங்களான ஜெல்லி மீன்கள்(jellyfish) மற்றும் கல் இறால்(lobster) ஆகியவற்றிக்கு இறப்பே இல்லை மற்றும் அவைகளுக்கு வயது முதிர்வு இல்லை என்பதால் கொன்றால் மட்டுமே அவை இறக்கின்றன. ஆகையால், இவ்விரண்டு உயிரினமும் உயிரியல் அடிப்படையில் அழிவில்லாதவை எனக் கருதப்படுகிறது. இவ்வாறான தகவல்கள் இணையத்தில் அதிகம் வைரலாகியவை.

Advertisement

உயிரியல் அடிப்படையில் அழிவில்லாதவை( biologically immortals) என்பது உயிரினங்கள் இறவாமையில் இருந்து இறப்பதில்லை, அறிவியல் ரீதியாக வயது ஆவதில்லை என்பது பொருள்.

1.ஜெல்லி மீன்கள் அழிவில்லாதவையா 2. கல் இறால் அழிவில்லாதவையா என தனித்தனியாக இரு வேறு கேள்விகளை முன்னிறுத்தி தேடி பார்த்ததில் இவ்விரு உயிரினங்கள் பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது.

” அனைத்து வகையான ஜெல்லி மீன்களும் அழிவில்லாதவை அல்ல, ஆனால், தெளிவாகவே ஜெல்லி மீன்களின் ஒரு வகையான Turritopsis Nutricula உயிரியல் அழிவில்லாதவை என்று ஆவணங்கள் உள்ளன. இந்த அதிசய சம்பவம் பற்றி 1996-ல் முதல் முறையாக செய்தி வெளிவந்தது, அதன்பின் செயல் விளக்கமளிக்க சோதனைக் கூடத்தில் ஆய்வுகள் நடைபெற்று 2013-ல் Nikki R.Kong என்பவரால் Berkeley Science review story-ல் வெளியாகியது “.

Advertisement

Turritopsis Nutricula-ல் மட்டுமே தனித்துவமானவை. ஏனென்றால், பாலியல் முதிர்வு நிலைக்கு அடைந்த பிறகு அவற்றால் முந்தைய உயிர் நிலைக்கு மாற்றியமைக்க முடியும் என்பதால் தான். ஆனால், அனைத்து விதமான ஜெல்லி மீன்களுக்கும் இந்த தனித்துவம் இருப்பதில்லை.

கல் இறாலின் செல்கள் முதிர்வை தடுக்க Telomerase என்னும் என்ஸைமை நிலையாக வெளியிட்டு வருவதே அதிசய சம்பவத்திற்கு காரணம் என்று நிரூபிக்க முடியாத அளவிலான கருத்தை வெளியிட்டனர்.

College of William & Mary marine science பேராசிரியர் Jeffrey D.Shields Smithsoniam piece-ல் கூறுகையில், “ கல் இறால்கள் உயிரியல் அழியா உயிரினம் என்பது பற்றி ஆராய்கையில் 10 முதல் 15 சதவீத கல் இறால்கள் இறக்கின்றன. இந்த இறப்புகள் அவற்றின் வாழ்வில் உடலில் ஏற்படும் தொற்றால் உண்டாகிறது. மேலும், வயது முதிர்வு ஏற்பட்டும் இறக்கின்றன என வாதாடியுள்ளார் “.

கல் இறால்கள் இருப்பதில்லை, வயது முதிர்வு இல்லை என்று கருத்துகளை முன்வைத்தாலும், அவைகளுக்கும் வயது முதிர்வதும், இளம் வயதில் இறப்பதும் இயல்பாக நடைபெறுகிறது. Turritopsis தவிர மற்ற அனைத்து ஜெல்லி மீன்களும், கல் இறால்கள் அழிவில்லாதவை என்பது முற்றிலும் தவறானவை.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button