ஜோ பைடன் ஜார்ஜ் ஃபிளாய்ட் மகளிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டாரா ?

பரவிய செய்தி

ட்ரம்பின் ஆட்சிகாலத்தில் கறுப்பின அமெரிக்கர் ஒருவர் வெள்ளையின அமெரிக்க போலீசாரால் கழுத்து நெரித்து பகிரங்கமாக கொலை செய்யப்பட்டமை அமெரிக்கா மட்டுமன்றி முழு உலகிலும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. குறித்த இறந்த கறுப்பின நபரின் மகளான அச்சிறுமி முன் மண்டியிட்டு மன்னிப்பு கோரும் அமெரிக்க புதிய அதிபர். மன்னிப்பதை விட, மன்னிப்பு கேட்பதே மிகப் பெரிய விடயம் எனவே பராட்டவேண்டியவர்தான்.

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரை போலீஸ் கைது செய்யும் போது, அவரை தரையில் படுக்க வைத்து கழுத்தில் முட்டியால் அழுத்தி கொலை செய்த காட்சிகள் உலக அளவில் கண்டனத்தைப்.பெற்றது. இதற்காக அமெரிக்காவில் பல்வேறு போராட்டங்கள் நிகழ்ந்தன.

Advertisement

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபரான ஜோ பைடன் ஜார்ஜ் ஃபிளாய்ட் மகளின் முன்பாக மண்டியிட்டு மன்னிப்பு கோரியதாக இப்புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆகையால், இதன் உண்மைத்தன்மை குறித்து அறிந்து கொள்ள தீர்மானித்தோம்.

உண்மை என்ன ?

ஜோ பைடன் ஒரு குழந்தையின் முன்பாக முழங்காலிட்டு இருக்கும் புகைப்படத்தை ரிவர்ஜ் இமேஜ் சேர்ச் செய்கையில், கானா நாட்டைச் சேர்ந்த குழந்தை நடிகரான டான் லிட்டில் என்பவருடன் பைடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் என சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கின்றன.

ஆனால், செப்டம்பர் 18-ம் தேதி ghanaweb.com எனும் இணையதளத்தில் ஜோ பைடன் முழங்காலிட்டு இருக்கும் புகைப்படத்தில் அவருக்கு அருகே இருக்கும் சிறுவன் டான் லிட்டில் இல்லை என வெளியிட்டு இருக்கிறார்கள்.

Advertisement

அமெரிக்க அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் தேர்தல் பிரச்சாரத்திற்காக டெட்ராய்டு பகுதிக்கு சென்றுள்ளார். ஜோ பைடன் உடன் இருப்பது அங்குள்ள த்ரீ தேர்ட்டீன் கடை உரிமையாளரின் மகன் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Twitter Archive link

Reuters உடைய வடக்கு அமெரிக்காவின் எடிட்டர் corinne_perkins என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில், ஜோ பைடன் தன்னுடைய பேரக் குழந்தைகளுக்கு சில பொருட்களை வாங்க த்ரீ தேர்ட்டீன் கடைக்கு சென்றதாக குறிப்பிட்டு இதே புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Joe Biden (@joebiden)

Archive link 

செப்டம்பர் 15-ம் தேதி ஜோ பைடன் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் டெட்ராய்டு பகுதியை குறிப்பிட்டு இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது. ஆனால், புகைப்படத்தில் இருப்பது ஜார்ஜ் ஃபிளாய்ட் உடைய மகள் என எந்தவொரு தகவலும் பகிரவில்லை.

முடிவு : 

நம் தேடலில், அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் ஜார்ஜ் ஃபிளாய்ட் மகளின் முன்பாக மண்டியிட்டு மன்னிப்பு கேட்டதாக பகிரப்படும் தகவல் தவறானது. அப்புகைப்படத்தில் இருப்பது டெட்ராய்டு பகுதியைச் சேர்ந்த சிறுவன் என நம்மால் அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button