ஜாய் ஆலூக்காஸ் நிறுவனர் துபாயில் தற்கொலையா ?| தவறாக பரவும் செய்தி.

பரவிய செய்தி
14-வது மாடியில் இருந்து குதித்து ஜாய் ஆலூக்காஸ் அதிபர் அரக்கல் துபாயில் தற்கொலை! கேரளாவுக்கு உடல் கொண்டு வரப்படுகிறது!!
விளக்கம்
ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடை நிறுவனத்தின் நிறுவனர் ஜாய் அரக்கல் துபாயில் தற்கொலை செய்து கொண்டதாக செய்தித்தாளில் வெளியான பக்கம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும், சமூக வலைதளங்களில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனர் கொரோனா வைரஸ் காரணமாக இறந்ததாகவும் பரப்பி வருகிறார்கள்.
உண்மை என்ன ?
Gulf News இணையதளத்தில், ” ஏப்ரல் 23-ம் தேதி கேரளாவைச் சேர்ந்த இந்திய தொழிலதிபர் ஜாய் அரக்கல் தற்கொலை செய்து கொண்டதாக துபாய் போலீஸ் உறுதிப்படுத்தி உள்ளது . அவர் பிசினஸ் பே கட்டிடத்தின் 14-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். முதலில் அவர் மாரடைப்பு காரணமாக இறந்ததாக செய்திகள் பரவின. பின்னர், ஃபைனான்சியல் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டு உள்ளதாக துபாய் போலீஸ் தெரிவித்து இருக்கிறார்கள் ” என அறிய முடிகிறது.
கேரளாவின் வயநாட்டைச் சேர்ந்த அரக்கல் ஐக்கிய அமீரகத்தில் இன்னோவா குரூப் உடைய நிர்வாக இயக்குனர் ஆவார். இந்த குரூப், பெட்ரோலியம் மற்றும் பெட்ரோகெமிக்கல் தயாரிப்புகள் சார்ந்த தொழிலை மேற்கொண்டு வந்துள்ளார். அந்நிறுவனத்திற்கு ஐக்கிய அமீரகம், குவைத், சவூதி அரேபியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அலுவலங்கள் உள்ளன.
