Joy Sticks பட்டன்கள் தயாரிப்பதற்காக வருடத்திற்கு 10 மில்லியன் நாய்கள் கொலையா ?

பரவிய செய்தி
PlayStation controller-ஐ தயாரிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் 10 மில்லியன் நாய்கள் கொல்லப்படுகின்றன.
மதிப்பீடு
சுருக்கம்
ஜாய் ஸ்டிக் பட்டன் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு தான் தயாரிக்கப்படுகின்றன. நாய்களை கொன்று அதன் மூக்கினை பயன்படுத்தி PlayStation controller-ல் இருக்கும் ஜாய் ஸ்டிக் பட்டன் தயாரிக்கப்படுவதாகக் கூறிவது தவறு. அதை முதலில் செய்தியாக போட்ட தளம் ஒரு Scarcastic Website, கேலியாக சித்தரிப்புகளை செய்கிற தளம் .
விளக்கம்
வீடியோ கேம்ஸ் விளையாட்டை குழந்தைகள் மட்டுமின்றி இளைஞர்களும் அதிகளவில் விளையாடி மகிழ்வர். அத்தகைய PlayStation விளையாட்டிற்கு பயன்படுத்தப்படும் controller-ல் உள்ள ஜாய் ஸ்டிக் பட்டன் நாய்களின் மூக்கினை கொண்டு தயாரிக்கப்படுகின்றன என்று வதந்திகள் பரவி வருகின்றன.
Empire news இணையதளம்:
2015 ஆம் ஆண்டு empire news என்ற தளத்தில் sony நிறுவனத்தில் வீடியோ கேம்ஸ் controllers தயாரிப்புகள் பற்றி தகவல்கள் கிடைத்துள்ளதாக ஓர் கட்டுரை வெளியாகியது. அதில்,
“ sony நிறுவனத்தில் தயாரிக்கப்படும் வீடியோ கேம்ஸ் ஜாய் ஸ்டிக்யில் உள்ள பட்டன்களில் சொரசொரப்பான பிடிப்பிற்காக நாயின் மூக்கினை பயன்படுத்துவதாக ஜாய் கோல்ட்ஸ்மித் என்பவரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக அந்நிறுவனம் அதிகளவில் மொத்தமாக இறந்த நாய்களை விலைக் கொடுத்து வாங்குகின்றனர். உலகம் முழுவதும் கொண்டு வரப்படும் நாய்களை ஜப்பானில் உள்ள அதன் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
பட்டனின் பிடிப்பிற்காக பல்வேறு மாற்றுவழிகள் முயற்சித்தப்பிறகே நாயின் மூக்கினை பயன்படுத்த துவங்கியதாகவும், அதிகளவில் நாய்களை கொன்று அவற்றை பயன்படுத்தி வருவது பெரிய அளவில் செலவிடுவதாக தெரியவில்லை என்று அந்நிறுவனத்தின் ceo Nah Bro Li கூறியுள்ளார்.
இதற்காக மிகப்பெரிய அளவில் நாய்களை கொன்றும், இறந்த நாய்களை விலைக்கு வாங்கியும் வீடியோ கேம்ஸ் ஜாய் ஸ்டிக் தயாரித்து வருவதாகவும், உலகில் பல்வேறு நிறுவனங்களும் இவர்களை போன்று செயல்படுவதாகவும் அவர்களின் மீது விலங்குநல அமைப்புகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அத்தளத்தில் கூறப்பட்டுள்ளன.
ஜாய் ஸ்டிக் பட்டன்:
PlayStation controller ஆன ஜாய் ஸ்டிக்கில் உள்ள பட்டனில் சொரசொரப்பான பகுதி இருப்பது உண்மை. எனினும், பிடிப்பிற்காக ஜாய் ஸ்டிக் பட்டன் நாயின் மூக்கினை கொண்டு தயாரிக்கப்படுகிறது என்பது முற்றிலும் தவறானது. பெரும்பாலும் இவை பிளாஸ்டிக் போன்ற செயற்கையான பொருட்கள் (Synthetic materials) கொண்டு தான் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக, இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஜாய் ஸ்டிக்கில் பட்டன்கள் செல்வது, திரும்புவது, சுற்றுவது போன்றவற்றிக்கு பயன்படுகின்றன.
ஜாய் ஸ்டிக்கில் இயற்கை பொருட்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்பதில் இருந்து, ஆண்டிற்கு 10 மில்லியன் அளவிலான நாய்கள் இதற்காக கொல்லப்படுகின்றன என்பது முற்றிலும் வதந்தியே . மேலும் இதை முதலில் செய்தியாக போட்ட Empire News தளம் ஒரு Scarcastic Website, கேலியாக சித்தரிப்புகளை செய்கிற தளம் .
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.