2020 ஜூன் 21-ம் தேதி உலகம் அழியப்போகிறதா ? மீண்டும் பரவும் சதிக் கோட்பாடு !

பரவிய செய்தி

வெளிவந்த தகவல் !உலக அழிவு உறுதி..? மாயன் காலண்டர் படி அடுத்த ஜூன் 21 2020’ல் தான் உலகம் அழியப் போகுதாம். விஞ்ஞானி கணிப்பு.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

2020 ஆண்டு கொண்டாட்டத்துடன் ஆரம்பித்தாலும் கோவிட்-19 கொள்ளை நோய், இயற்கை பேரழிவுகள், பொருளாதார மந்தநிலை, தொடர் மரணங்கள் என தொடர்ச்சியாக நிகழ்வதை மறுக்கவும் முடியாது. அதை மேற்கொள்காட்டி பலரும் பூமியே இனி இருக்கப்போவதில்லை என்கிற அளவிற்கு பேசத் துவங்கினர்.

உலகம் அழியப் போகிறது என்கிற வார்த்தையை கேட்டுக் கேட்டுக் புளித்து போய் இருப்போம். பல முறை உலகம் அழியப் போகிறது என்கிற கணிப்புகள் வந்த வண்ணமே உள்ளன. தற்போது 2020 ஜூன் 21-ம் தேதி உலகம் அழியப் போகிறது என்கிற தகவல் உலக அளவில் வைரலாகி வருகிறது.

Advertisement

மாயன் காலண்டர் 2012 டிசம்பர் 21-ம் தேதிக்கு பிறகு கணிக்கப்படவில்லை, ஆகையால் உலகம் அழியும் என பரவி உலக மக்கள் பெரிதும் நம்பி இருந்தனர். அவ்வாறு ஏதும் நிகழவில்லை. ஆனால், மாயன் காலண்டர் கூறிய இறுதி நாள் 2020 ஜூன் 21-ம் தேதி தான் என சதிக் கோட்பாட்டாளர்கள் விவாதிக்கத் தொடங்கி உள்ளனர்.

சூரியனை பூமிச் சுற்றி வரும் காலத்தை அடிப்படையாக கொண்ட கிரிகோரியன் காலண்டர் முறையை நாம் பயன்படுத்தி வருகிறோம். இதையே அறிவியல் வல்லுனர்களும் அறிவியல்பூர்வமானது என ஏற்றுக்கொண்டுள்ளனர். 1582-ம் ஆண்டுக்கு முன் இந்த காலண்டர் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக பல வகையான காலண்டர்கள் மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அதில் மிக முக்கியமானது மாயன் மற்றும் ஜூலியன் காலண்டர்.

” 1752-ம் ஆண்டு கிரிகோரியன் காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஜூலியன் காலண்டரில் உள்ள 11 நாட்களை கணக்கிடவில்லை. கடந்த 268 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் கிரிகோரியன் காலண்டரில் ஒவ்வொரு வருடத்திற்கும் 11 நாட்களை சேர்க்கும் போது 2948 நாட்கள் நமக்கு கிடைக்கும். அதன்படி (2948/365=8) கிடைக்கும் 8 வருடங்கள் சேர்க்கப்பட்டால் 2020 ஜூன் 21-ம் தேதியே மாயன் காலண்டரில் குறிப்பிடப்பட்ட 2012 என என்றும், நாம் 2012-ம் ஆண்டில் தான் இருக்கிறோம் என்றும் ” விஞ்ஞானி பாலோ டகாலோகுயின் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

ஆனால், அவரின் ட்வீட் பதிவு நீக்கப்பட்டது. இதையடுத்தே உலக அளவில் அனைத்து சமூக ஊடகங்களிலும், செய்திகளும் இத்தகவல் பெரிதும் பரவி வருகிறது. ஏற்கனவே, 2012-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி உலகம் அழியும் எனக் கூறிய கோட்பாடு பொய்யாகியது. அது தற்போது மீண்டும் தொடங்கி இருக்கிறது. இதுபோன்ற சதிக் கோட்பாடுகளுக்கு ஆதாரங்கள் ஏதுமில்லை.

இந்த சதிக் கோட்பாடுகளுக்கு எதிராக நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் கேள்வி எழுப்பியதோடு, ஆதாரமற்றவை என கடந்த 2012-ம் ஆண்டு கணிப்பின் போதே தெரிவித்து இருந்தது.

Advertisement

” இக்கதை சுமேரியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் எனக் கூறப்படும் நிபிரு பூமியை நோக்கி செல்கிறது என்பதில் தொடங்கியது. இந்த பேரழிவு 2003-ம் ஆண்டு மே மாதம் கணிக்கப்பட்டது. ஆனால், ஏதும் நிகழாத நிலையில் 2012 டிசம்பரில் மாயன் காலண்டரைச் சுட்டிக்காட்டி நகர்த்தப்பட்டது. 2012-ல் பேரழிவு அல்லது வியக்கத்தகு மாற்றங்கள் நிகழ்வது தொடர்பாக கூறும் எந்தவொரு கூற்றுக்கும் அறிவியல் எங்கே ? ஆதாரம் எங்கே ?. எதுவும் இல்லை ” என 2012-ல் தெரிவித்து இருந்தது.

எந்தவொரு ஆதாரமும் இல்லாத காரணத்தினால் நாசா இக்கோட்பாட்டை உண்மைகளை மாற்ற முடியாத ஓர் கற்பனையான கூற்று என்றேக் கருதியது. கடந்த முறை போலவே இம்முறையும் உலகம் அழியும் என்றக் கூற்றை முன்வைப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஜூன் 21-ம் தேதிக்கு இன்னும் 6 நாட்கள் கூட இல்லாத நிலையில் 2020 ஜூன் 21-ம் தேதி உலகம் அழியுமா, மாற்றி அமைக்கப்பட்டதாக கூறும் மாயன் காலண்டர் குறித்த தேடலை மக்கள் இணையத்தில் தொடங்கி உள்ளனர். அதுதொடர்பான பேச்சும், உண்மையா என்ற தேடலும் மக்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. தொடர்ந்து பரவி வரும் ஆதாரமற்ற கூற்றை நம்பி மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம் / Proof Links

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close