கைலாய மலையின் தரிசனம் எனப் பரப்பப்படும் ஜப்பான் எரிமலையின் காட்சி !

பரவிய செய்தி

இப்படி ஒரு கைலாஷ் தரிசன காட்சி காணவே முடியாது…

மதிப்பீடு

விளக்கம்

” இப்படியொரு கைலாச மலையின் தரிசனத்தை பார்க்கவே முடியாது ” என மலையை சுற்றி மேகங்கள் நகர்வது போல் ஓடும் நான்கு நொடிகள் கொண்ட (GIF) வீடியோ சமூக வலைதளங்களில் நீண்ட நாட்களாக வைரலாகி வருகிறது.

Archive link 

உண்மை என்ன ?  

சீன கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத் பகுதியில் உள்ள கைலாய மலை கடல் மட்டத்தில் இருந்து 6,638 மீட்டர் உயரத்தில் அமைந்து இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் கைலாய யாத்திரைக்கு செல்கின்றனர். யாத்திரை மேற்கொள்பவர்கள் இந்தியப் பாதையில் சென்ற பிறகு சீனாவின் வசம் இருக்கும் திபெத் பகுதி பயணிக்க அந்நாட்டின் விசா அவசியமாகிறது. இப்படி மேற்கொள்ளப்படும் கைலாய மலை பயணத்தின் வீடியோக்கள் பல இணையத்தில் உள்ளன.

கைலாய மலை என வைரல் செய்யப்படும் வீடியோவில் இருக்கும் மலைக்கும், கைலாய மலை பயணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவில் இருக்கும் மலைக்கும் வேறுபாடுகள் உள்ளன. மேலும், மேகங்களுக்கு நடுவே அமைந்து இருக்கும் மலை பார்ப்பதற்கு எரிமலை போன்று காட்சியளிக்கிறது.

ஆகையால் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2017-ல் Airporttag எனும் முகநூல் பக்கத்தில், ஜப்பானில் உள்ள உயரமான புஜி மலை என வைரல் செய்யப்படும் நான்கு நொடிகள் கொண்ட அதே வீடியோ பதிவாகி இருக்கிறது.

விமானத்தில் இருந்து மேகங்கள் உடன் இருக்கும் மவுண்ட் புஜியை எடுத்த வீடியோ காட்சி ஒன்று 2017-ல் யூடியூப் சேனல் ஒன்றில் வெளியாகி இருக்கிறது. ஜப்பானில் உள்ள மவுண்ட் புஜியை விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை GIF ஆக மாற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், கைலாய மலை தரிசனம் என சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வீடியோவில் உள்ளது கைலாய மலை அல்ல, அது ஜப்பானில் உள்ள புஜி எரிமலை என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader