“பள்ளி மீது தவறு இல்லை” என டிஜிபி சைலேந்திரபாபு கூறியதாக செய்தி வெளியிட்டு நீக்கிய தந்தி டிவி!

பரவிய செய்தி

பள்ளி மீது எந்த தவறும் இல்லை. போராட்டக்காரர்களை வீடியோ காட்சிகளை வைத்து பின்னர் கைது நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மீது எந்த தவறும் இல்லை – டிஜிபி சைலேந்திரபாபு

மதிப்பீடு

விளக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்த 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததாக நீதி வேண்டி சமூக வலைதளங்களில் ஆதரவு குரல்கள் எழுப்பப்பட்டு வந்தது. இதற்கிடையில், மாணவியின் பிரேதப்பரிசோதனை அறிக்கை நேற்று வெளியானது.

இதையடுத்து, இன்று மாணவியின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னசேலம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டம் பின்னர் கலவரமாக மாறியது. போராட்டம் கலவரமாக மாறியது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பள்ளி மீது எந்த தவறும் இல்லை என டிஜிபி சைலேந்திரபாபு கூறியதாக தந்தி டிவி நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

உண்மை என்ன ? 

பள்ளி மீது எந்த தவறும் இல்லை என டிஜிபி சைலேந்திரபாபு கூறியதாக பரவும் நியூஸ் கார்டு குறித்து தந்தி டிவி சமூக வலைதள பக்கங்களில் தேடுகையில், அந்த பதிவு இடம்பெறவில்லை. ஆனால், அப்படியான செய்தியை வெளியிட்ட தந்தி டிவி பின்னர் நீக்கி இருக்கிறது.

” பிளஸ் 2 மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் மாணவர் அமைப்பினர் போராட்டம். போராட்டக்காரர்களை வீடியோ காட்சிகளை வைத்து பின்னர் கைது நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மீது எந்த தவறும் இல்லை – டிஜிபி சைலேந்திரபாபு ” எனும் செய்தியை வெளியிட்டு பின்னர் நீக்கி இருக்கிறது.

டிஜிபி சைலேந்திரபாபு அளித்த பேட்டியை வெளியிட்ட பிற சேனல்களின் செய்திகளில், அவர் பள்ளி மீது எந்த தவறும் இல்லை எனக் கூறியதாக இடம்பெறவில்லை. உயிரிழந்த மாணவியின் கடிதம் ஒன்று கிடைத்து உள்ளதாகவும், அதில் சரியாக படிக்க வரவில்லை எனக் குறிப்பிட்டு உள்ளதாகவும் தெரிவித்த டிஜிபி சைலேந்திரபாபு, “விசாரணை நடைபெற்று வருகிறது. அதற்கு முன்பாக, போராடுகிறார்கள் என்பதற்காக உரிய காரணமின்றி ஆசிரியர்களை கைது செய்ய இயலாது” என செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்து உள்ளார்.
.
முடிவு : 
.
நம் தேடலில், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி மீது எந்த தவறும் இல்லை என டிஜிபி சைலேந்திரபாபு கூறியதாகப் பரப்பப்படும் செய்தி தவறானது. அப்படியொரு செய்தியை வெளியிட்ட தந்தி டிவி அதை நீக்கி இருக்கிறது என அறிய முடிகிறது.
Please complete the required fields.




Back to top button
loader