இரயில் தண்டவாளத்தில் கான்க்ரீட் : பழைய படத்தை திமுக ஆட்சியெனப் பரப்பும் பாஜகவின் கல்யாண் ராமன் !

பரவிய செய்தி

படத்தைப் பார்த்தவுடன் முதலில் மனதில் ஓடிய வார்த்தை திராவிட மாடல் : பாஜக கல்யாண் ராமன் 

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

புதிதாகச் சாலை போடும் பணியின் போது அடி பம்ப்களைப் புதைத்தது போல் இப்போது ரயில் தண்டவாளத்தையும் புதைத்து உள்ளதாக இப்புகைப்படத்தைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து சிலர் ஆளும் திமுக அரசை விமர்சித்து வருகின்றனர்.

Twitter Link

தமிழ்நாடு பாஜகவின் சிந்தனையாளர் பிரிவின் பொறுப்பாளர் கல்யாண் ராமன், இது தான் திராவிட மாடல் என வைரலான புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

உண்மை என்ன ?

இரயில்வே துறை கட்டுமானங்கள் அனைத்தும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பட்சத்தில் பாஜகவின் கல்யாண் ராமன் மாநில அரசை விமர்சிப்பது உண்மைக்கு முரணாக உள்ளது.

மேலும், பாஜகவின் கல்யாண் ராமன் பகிர்ந்த புகைப்படத்தை ரிவேர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்த்ததில் அந்தப் புகைப்படம் பல ஆண்டுகளாகவே இணையத்தில் பரவி வருவது தெரிய வருகிறது. இவை பெரும்பாலும் நையாண்டிப் பதிவாகவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

2012 நவம்பர் 27ம் தேதி irishrailwaymodeller எனும் இணையத்தளத்தில் Irish Railway Jokes எனும் தலைப்பில் பாஜகவின் கல்யாண் ராமன் பகிர்ந்துள்ள புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்துள்ளனர்.

Website Link

யுனைடெட் கிங்டமை(United Kingdom) சார்ந்த கட்டுமானத் துறையில் உள்ள Blara Group எனும் நிறுவனம், “நாங்கள் இதுப்போன்ற கட்டுமானங்களைச் செய்வதில்லை” என வைரலான புகைப்படத்தை 2016ம் ஆண்டுத் தங்களது ட்விட்டர் பக்கத்தில் நையாண்டியாகப் பதிவிட்டுள்ளனர்.

Twitter Link

constructionchemicals எனும் இணையத்தளத்தில் Train track design – schoolboy errors எனும் தலைப்பில் தற்போது வைரலாகப் புகைப்படத்தை 2015 பிப்ரவரி 28ம் தேதி பதிவிட்டிருந்தனர்.

Website Link

தமிழ்நாடு பாஜகவின் சிந்தையாளர் பிரிவின் பொறுப்பாளர் கல்யாண் ராமன் தனது ட்விட்டர் கணக்கில் பொய்யான தகவல்களைப் பதிவிடுவது ஒன்றும் புதிதல்ல.

இவர் கூறிய பொய்களை ஏற்கனவே Youturn தளம் Factcheck செய்து கட்டுரைகள் வெளியிட்டுள்ளது.

பிரிட்டனின் பிரதமரானதும் ரிஷி சுனக் மனைவியுடன் கோமாதா பூஜை செய்தாரா ?

காங்கிரஸ் ஆட்சி வந்தால் தேசிய கொடியில் பிறை இடம்பெறும் எனப் பிபிசியின் மார்க் டூலி கூறினாரா ?

ஆகமத்தை, இறைவனை மதிக்கவில்லை! பழைய புகைப்படத்தைப் பகிர்ந்து பொங்கும் காயத்ரி ரகுராம்

முடிவு :

நம் தேடலில், இரயில்வே தண்டவாளத்தின் நடுவே கான்க்ரீட் கட்டுமானத்தை திமுக அரசு கட்டியுள்ளதாக பாஜகவின் கல்யாண் ராமன் பரப்பிய செய்தி பொய். அந்த புகைப்படம் பல ஆண்டுகளாக இணையத்தில் சுற்றி வரும் பழைய படம் என நம்மால் அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader