கமல்ஹாசன் தன் காருக்கு இன்சூரன்ஸ் கட்டவில்லை எனப் பரவும் தவறான தகவல்!

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன்னுடைய காரின் இன்சூரன்ஸ் காலாவதியாகியும் புதுப்பிக்காமல் பயன்படுத்தி வருவதாகவும், இவர்தான் நேர்மையின் சிகரம் எனக் கூறி கமலின் காரின் புகைப்படம் மற்றும் எம்பரிவாஹன் செயலியின் மூலம் எடுக்கப்பட்ட காரின் விவரங்கள் உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எம்பரிவாஹன் செயலியில் கமல் பயணிக்கும் காரின் எண் ” TN07CS 7779 “-ஐ உள்ளீட்டு பார்க்கையில், காரின் இன்சூரன்ஸ் 2020 மார்ச் 6-ம் தேதியுடன் முடிவடைந்ததாகவே காண்பிக்கிறது. இந்த செயலியில் கிடைத்த விவரத்தை வைத்தே சமூக வலைதளங்களில் கமல் மீது கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
ஆனால், வாஹன் இணையதளத்தில் கார் எண் ” TN07CS 7779 ” உள்ளீட்டு பார்க்கையில் 2022 மார்ச் 6-ம் தேதி வரை இன்சூரன்ஸ் பயன்பாட்டில் உள்ளதாகக் குறிப்பிடட்டுள்ளது. காரின் இன்சூரன்ஸ் 2022 மார்ச் 6-ம் தேதி வரை இருப்பதை 2020 மார்ச் 6-ம் தேதி வரை என எம்பரிவாஹன் செயலியில் தவறாக காண்பிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் காரின் இன்சூரன்ஸ் தொடர்பாக எம்பரிவாஹன் செயலி மூலம் கிடைத்த தவறான தகவலால் மக்கள் குழப்பமடைந்து உள்ளனர். தவறான தகவலை பகிர வேண்டாம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.