ரஷ்ய பாராளுமன்றத்தில் காமராஜர் புகைப்படம். ஃபோட்டோஷாப் தொழிநுட்பமா ?

பரவிய செய்தி

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இவரது படம் இருக்கா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், ரஷ்ய பாராளுமன்ற அலுவலகத்தில் படிக்காத மேதை ஐயா காமராஜர் படம் உள்ளது !!

மதிப்பீடு

விளக்கம்

தமிழக அரசியலில் அழியா சின்னமாக விளங்கிய ஐயா காமராஜரின் படம் தமிழக சட்டமன்றத்தில் உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால், காமராஜரின் சிறப்பறிந்த ரஷ்ய அரசு அவரின் புகைப்படத்தை ரஷ்ய பாராளுமன்றத்தின் அலுவலகத்தில் வைத்துள்ளது என்று சமூக வலைத்தளங்களில் இப்படங்கள் அதிகம் பகிரப்படுகிறது.

ரஷ்ய பாராளுமன்றத்தின் அலுவலகத்தில் காமராஜரின் புகைப்படம் காணப்படுவது ஃபோட்டோஷாப் தொழிநுட்பதால் என்பது வேதனையான தகவல். இன்றைய காலத்தில் ஃபோட்டோஷாப் மூலம் தலைவர்களை இழிவுபடுத்துவது, சில தலைவர்களை உயர்த்தி காட்டுவது , தலைவனையே உருவாக்க கூட இயலும் என்பதை நாம் நன்றாகவே அறிந்திருப்போம்.

Advertisement

ஐயா காமராஜரின் புகைப்படம் ரஷ்ய பாராளுமன்றத்தில் இருப்பது போலவே அண்ணல் அம்பேத்கரின் புகைப்படம் இருப்பது போன்ற படங்கள் இந்திய அளவில் வைரலாகியவை. இவ்வாறு புகைப்படங்களை மாற்றி அமைக்க பயன்படுத்தப்படும் Apps மூலம் நம் யாருடைய புகைப்படங்களையும் பொருத்தி கொள்ளலாம். 

ரஷ்ய அதிபருக்கு பின்னால் ஃபோட்டோஷாப் புகைப்படங்கள் இருக்கும் இடத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் இரு தலை கழுகின் சின்னம் இடம்பெற்றிருக்கும். ரஷ்ய பேரரசில் தொடங்கி சோவியத் யூனியன் ஒன்றியத்தை கடந்து தற்போதைய ரஷ்யா வரை பல சின்னங்கள் மாறியுள்ளன.

Advertisement

ரஷ்யாவின் மரபு வழிச் சார்ந்த சின்னங்கள் பொருந்திய தற்போதைய சின்னத்தில் இடம்பெற்ற இரண்டு தலை கழுகின் தலையில் இரு ஏகாதிபத்திய கீரிடங்களும், செங்கோல் மற்றும் கேடயங்களும் அமைத்திருக்கும். இத்தகையcoat of Arm of Russia, 1993 ஆம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி பல அரசியல் நெருக்கடிகளுக்கு இடையே அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆக, உயர்ந்த தலைவர்களுக்கு ஃபோட்டோஷாப் தொழில்நுட்பத்தால் பெருமை தேடுவதாக நினைத்து அவர்களின் நற்ப்பெயரை கெடுக்கும் விதத்தில் சிலரின் செயல்கள் அமைந்து விடுகின்றன.

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Subscribe with

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close